– N-77
லண்டன்: பிரசவ அறையில் பிறக்கும் போதே அம்மாவை கட்டிப்பிடித்து அழுத அதிசய குழந்தையின் வீடியோதான் இன்றைக்கு இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பிரசவ அறையில் குழந்தை பிறந்த உடன் அதை கழுவி சுத்தம் செய்து பின்னர் தாயிடம் கொடுப்பார்கள் மருத்துவர்கள்.
முதன்முறையாக சீம்பால் கொடுத்து தனது ஸ்பரித்தை குழந்தைக்கு உணர்த்துவார் தாய். ஆனால் இரு தினங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்த குழந்தை ஒன்று வெளி உலகத்தை பார்த்த உடனேயே அம்மாவை கட்டிப்பிடித்து அழுது தனது பாசத்தை வெளிப்படுத்தியுள்ளது.
தாயிடம் இருந்து அந்த குழந்தையை பிரிக்க தாதி முயற்சி செய்த போதும் அது அம்மாவின் முகத்தை விடாமல் இருக்கமாக கட்டிப்பிடித்தபடி அழுதது.
இந்த சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியது. பின்னர் ஒருவழியாக சமாளித்து குழந்தை பிரித்த தாதி நன்றாக சுத்தம் செய்து தாயிடம் ஒப்படைத்தார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோவைக் காண பின்வரும் link யைக் கிளிக் செய்யவும்
Leave a comment