பெண்ணின் இயற்கைத்தன்மை மற்றும் அவளது பலம், பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட சட்ட விதிமுறைகளின்படி, அவர்களது வாழ்க்கையை ஒழுங்குபடுத்தி இல்லறம் சிறக்க ஒழுக்க விழுமியமுள்ள சமூகம் ஒன்றினை உருவாக்குவதற்காக வழிவகைகளில் ஒன்றே பெண்ணுரிமையாகும்.
இன்று அனேகமான பெண்கள், பெண்களாகப் பிறந்ததன்றி, வேறு காரணம் எதுவுமின்றியே அடிப்படை மனித உரிமைகள் அற்றவர்களாக வாழ்வை அனுபவித்து வருகின்றனர். ‘சாதி ஒன்றுதான், ஆண் பெண் தன்மை, இரண்டுதான்’ என்பார்கள். மனித உரிமைகள் வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், ஒட்டு மொத்தமாக பெண்ணினம் அலட்சியப்படுத்தப்பட்டு வந்திருப்பதை நாம் அறிகிறோம். ஆகவே பெண்ணினது உரிமையும் மனித உரிமையே என்பதால் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு பற்றி நாம் அக்கறை கொள்வதோடு, அவர்களின் முன்னேற்றத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டிய கடற்பாடு அனைவருக்கும் உண்டு.
உலக சனத்தொகை புள்ளிவிபரங்களின்படி பெண்களின் எண்ணி;க்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லாவிதங்களிலும் ஆண்களைப் போலவே அறிவாற்றல்மிக்கவர்களாக, சிறந்த நிருவாகிகளாக, ஆராய்ச்சியாளர்களாக, அரசியல்வாதிகளாக பெண்கள் இன்று தங்களை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
ஆனால் மேற்கத்திய நாகரிகம் ஆணும் பெண்ணும் சமம் எனக் கூறி பெண்களை உசுப்பேற்றி அவர்களது நிம்மதியைப் பறித்து, அவர்களது பாதுகாப்பி;ற்கு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருவதை இன்று காணலாம். ஆனால் எமது நாட்டில் உள்ள பெண்கள் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் பண்பாடுகளில் வளர்க்கப்பட்டவர்களாக இருக்கின்றனர். இவ்வாறான பெண்ணிலைவாதங்கள் இறக்குமதி செய்யப்படுகின்ற போது எதிர்காலத்தில் குடும்ப வாழ்வை சீரழித்து கணவன் மனைவி உறவுக்கிடையிலான பிணைப்பினை இல்லாதொழித்து விடும். பெண் விடுதலை வேண்டி அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற நாளாகவே சர்வதேச மகளிர் தினம் அமைகிறது.
சர்வதேச மகளிர் தினத்தின் வரலாறு
சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிசில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமை பெற வேண்டும் என்றும் வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண் அடிமைத்தன விடுதலை என்ற கோரிக்கைகளை முன் வைத்து பாரிஸ் நகர தெருக்களில் பெண்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
அந்நாட்டு அரசன் ‘இவர்களை அதிகாரம் கொண்டு அடக்குவேன்’ என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரை கைது செய்வேன் என்றும் மிரட்டினான். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் இதில் கலந்து கொண்டனர்.
அரச மாளிகையை நோக்கி ஊர்வலம் கொட்டும் மழையில் சென்றது. அரசனின் மெய்ப்பாதுகாப்பாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை மிரட்டிய போது, மெய்ப்பாதுகாவலர் இருவரை கூட்டத்தினர் திடீரென்று தாக்கி;க் கொன்றனர். இதனை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன் எனவும் உங்களுக்கு சாதகமாக அறிவிப்பேன் என்றும் சமாதானப்படுத்தினான். இக்கோரிக்கையினை செய்ய இயலாது போகவும் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளிலும்; ஜேர்மனி, இத்தாலியிலும் வேகமாகப் பரவியது. அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க் பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும், பெண்களுக்கு வாக்குரிமை அளி;க்கவும் ஒப்புதல் தந்தார். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் திகதி. இந்த நாள்தான் சர்வதேச பெண்கள் தினமாக நினைவு கூறப்படுகிறது.
உலகம் முழுவதிலும் பெண்களின் அடிப்படை உரிமையில் பல சாதனைகள் அடையப்பட்டிருந்தாலும், இன்னமும் எத்தனையோ பெண்கள் இருட்டறைக்குள் குருட்டு விளக்குகள் போல் கூனிக் கிடக்கின்றனர். சீதனக் கொடுமையென்றும், மணமுடித்த கணவன் அநாதரவாய் விட்டுச் சென்றுள்ளானெனவும், பிள்ளைகளைப் பராமரிக்க முடியாமல் வாழ்க்கைச் சுமைகளை சுமந்து கண்ணீர் விட்டழுகின்ற பெண்களின் நிலை பற்றியும் நாம் கவனஞ்செலுத்த வேண்டும்.
பெண்கள் மனித உரிமைகள் பெற்றவர்களாக இருந்தும் கூட அவர்கள் மீதான வன்முறைகள் கசப்பான நிகழ்வுகளாக இருக்கின்றது. நாகரிகத்துடன் கூடிய சமுக வாழ்க்கை மனித குலத்திற்கு மட்டுமே உரியதோர் சிறப்பம்சமாகும்.
1979ம் ஆண்டின் பெண்களுக்கெதிரான எல்லா வகையான பாரபட்சங்களையும் நீக்குவதற்கான சமவாயமானது 1981ம் ஆண்டு அமுலுக்கு வந்தது. அதனை 180 நாடுகள் ஏற்று அங்கீகரித்தன. எங்கும் பெண்களுக்கான சமமான உரிமையைப் பெற்றுக் கொள்வதற்கான சர்வதேச ரீதியில் ஏற்கப்பட்ட கோட்பாடுகளும் நடவடிக்கைகளும் இச்சமவாயத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன. அனைத்து வடிவங்களையும் இல்லாதொழிக்கும் சாசனம் கொண்டு வரப்பட்டிருந்தாலும் வீட்டிலும், வெளியிலும், வேலைத் தளங்களிலும் போக்குவரத்தின் போதும் என எத்தனையோ சந்தர்ப்பங்களில் பெண்கள் வன்முறைகளை எதிர்கொள்கின்றனர். இன்று நாளுக்கு நாள் ஏறி;க் கொண்டிருக்கி;ன்ற விலைவாசியின் காரணமாக எத்தனையோ குடும்பங்களில் அமைதியின்மை காணப்படுகிறது. கணவனால் உழைத்து கொண்டுவரப்பட்ட காசு வாழ்க்கைச்; செலவுக்குப் போதாது. பிள்ளையை பிரத்தியோக வகுப்புக்கு அனுப்பி வைக்க முடியாது. இவ்வாறு பண நெருக்கடி ஏற்படுகி;ன்ற போது தாயின் மீதே பொறுப்புக்கள் குவிகின்றது. தாங்க முடியாத வேதனையில் பெண்ணாணவள் சுமைகளைத் தாங்குகிறாள்.
இன்று பெண்களின் கருத்துக்களை கொச்சைப்படுத்தி அவர்களை இழிவாக நடத்துகின்ற மனிதர்கள் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறர்கள். இது மனித உரிமைகளுக்கு மாற்றமானது என உணர்த்துவது எமது கடமை. தங்கள் அன்றாட வாழ்க்கையிலேயே தனிமைப்படுத்தல் அல்லது அரசியல் பொது வாழ்வில் ஈடுபடாமல் தடு;த்தல், வீட்டில் அடித்து துன்புபறுத்தல், நியாயமான காரணமின்றி விவாகரத்து செய்தல் போன்றவற்றை நாம் ஒதுக்க வேண்டும். பெண்ணினம் பாதுகாப்புடன் வாழ்வதில்தான் பெருமை இருக்கிறது.
பெண்களை கொடுமைப்படுத்தி துன்பம் விளைவிக்கின்ற அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட வேண்டும். அவர்களுக்கு விதிக்கி;ன்ற தண்டனைகளைக் கண்டு ஏனையவர்கள் படிப்பினை பெற வேண்டும். வாழ்க மகளிர்! வளர்க பணி.
Published by

Leave a comment