இணையத்தள பாவனை தொடர்பாக பாடசாலை அதிபர்களுக்கு பயிற்சி!

facebookகொழும்பு: ‘பேஸ்புக்’ உள்ளிட்ட இணையத்தள பாவனையின் போது மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் அதிபர்களை தெளிவுப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக தேசிய பாடசாலைகளின் அதிபர்களை தெளிவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக, அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையின் பொருட்டு கொழும்பில் செயலமர்வொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் இதன் போது பாடசாலை மற்றும் அதற்கு வெளியில் மாணவர்களின் இணையத்தள பாவனையின் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அவற்றை மேற்பார்வை செய்யும் வழிமுறைகள் தொடர்பில் அதிபர்களுக்கு தெளிவுப்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார். lk

Published by

Leave a comment