சிகரம் மீள்குடியேற்றக் கிராமத்தில் 55 தமிழ் முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

unnamed (5)பழுலுல்லாஹ் பர்ஹான்

சிகரம்: மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்றக் கிராமமான சிகரம் கிராமத்திலுள்ள வறிய தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு சிகரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 03-03-2014 நேற்று திங்கிட்கிழமை மாலை சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் சிகரம் ஜும்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.வை.ஆதம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஆரையம்பதி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எல்.பிரசாந்தன் உள்ளிட்ட அதிதிகளினால் 55 தமிழ் முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எல்.பிரசாந்தன், மண்முனைப்பற்று பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.நவநாயகம், ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அத்தியடசகர் திருமதி.எம்.சுரேந்திரன், காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி , சிகரம் பெண்கள் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி எம்.எஸ்.சியாமா மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

குறிப்பு கடந்த 7 வருடங்களாக தமிழ் முஸ்லிம் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் இத் திட்டம் சிரேஷ்ட ஊடகவியலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹியின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment