அறுப்பதை
நிறுத்திப் பார்ப்போம்
ஆறு மாதத்திற்கு..
வெறுப்பவரும்
விரும்பி வருவார்
வேறு வழியில்லாமல்…!
மாட்டிறச்சி
தின்னவேண்டுமென்று
மார்க்கத்தில் கடமையில்லை
அதனை
உண்ணாவிட்டால்
உயிர் போவதுமில்லை.
கடமையில்லாத
ஒன்றை
கட்டிப்பிடித்துக் கொண்டு
கதறவேண்டிய
கட்டாயமும் நமக்கு இல்லை.
அறுப்பது என்னவோ
முஸ்லிம்கள்தான்
ஆனால்
பெரும்பாண்மையிரே
பெரிதும் விரும்புகிறார்கள்.
மாடுகளை
வளர்ப்போரும், விற்போரும்
மரபு வழியில்
விலங்கை வைத்து
வேளாண்மை செய்பவரும்
பால்கறந்து
பயன் பெறுவோரும்..
அத்தனையும் அவர்கள்தான்
மாடுகள்
முதுமை அடைந்தால்
மாற்று வழி தெரியாமல்
அவர்கள்
தோற்றுப் போய் விடுவார்கள்
அடிப்படையை
விளங்காதவர்கள்
அனுபவ ரீதியாக
அறிந்து கொள்வார்கள்
ஆகையால்
அறுப்பதை
நிறுத்திப் பார்ப்போம்
ஆறு மாதத்திற்கு
வெறுப்பவரும்
விரும்பி வருவார்
வேறு வழியில்லாமல்…
உலமாக்களே..!
ஒன்று சேருங்கள் இதிலாவது..!!
கூடுங்கள்
கூட்டறிக்கை யொன்று விடுங்கள்
மாடறுப்பதை நிறுத்தி
மற்றவர்களுக்கு
பாடம் புகட்டச் சொல்லுங்கள்
அப்போதாவது
எம்மையும்; எம் மார்க்கத்தையும்
அவர்கள்
எளிமையாக புரிந்து கொள்வார்கள்.
Published by

Leave a comment