மாபெரும் கால் பந்தாட்டச் சுற்றுப்போட்டி காத்தான்குடி தேசியபாடசாலை மைதானத்தில்….

1975228_653934047997538_1982433778_n-டீன் பைரூஸ்- 

காத்தான்குடி: காத்தான்குடி கால்பந்தாட்டச் சங்கத்தின் ஏற்பாட்டினில் ‘ஹிஸ்புல்லாஹ் சவால்கிண்ணம்’ லீக் சுற்றுத்தொடரின் ஆரம்ப நிகழ்வு சென்ற 02.03.2014 ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மைதானத்தில் மிக விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி நிகழ்வுக்குப் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கௌரவ அல்ஹாஜ். எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்களும், கிழக்கு மாணசபை உறுப்பினர் அல்ஹாஜ். எம்.எப்.முகம்மது சிப்லி Eng, முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். யு.எல்.என்.எம்.முபீன்BA/JP, காத்தான்குடி நகரமுதல்வர் அல்ஹாஜ். எஸ்.எச்.எம்.அஸ்வர் JP, காத்தான்குடி தள வைத்தியசாலை வைத்திய அத்தியச்சகர் டாக்கடர். எம்.ஜாபிர் MBBS உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆரம்ப நிகழ்வாக காத்தான்குடி விக்டறி விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து ஏறாவுர் லக்கி வி.கழகம் மோதின இதில் ஏறாவுர் லக்கி வி.கழகம் 3-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றியினை தனதாக்கிக் கொண்டது.

போட்டியின் நடுவராக மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரும்,காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக கழகத்தின் சிரேஷ்ட வீரருமான என்.டீ.பாறூக் கடமையாற்றினார். மேற்படி போட்டினை கண்டுகளிக்க மிகக் கூடுதலான ரசிகர்கள் சமூகமளித்திருந்ததினை காணக்கூடியதாக இருந்தது.

1975228_653934047997538_1982433778_n1661726_653933957997547_1205540494_nOLYMPUS DIGITAL CAMERA OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA
OLYMPUS DIGITAL CAMERA
 

Published by

Leave a comment