துருப்பிடித்தப்போன
இரும்புப் பெட்டகத்தின்
தாழ்பாழை
தலையை கொடுத்து திறந்தேன்!-0-
அங்கே…
முலாம் மங்காத -ஓர்
மூத்த முகவரி!
ஐந்தாம் குறிச்சியில் – ஓர்
சமூக விடிவெள்ளி
விளித்தது….
முஹம்மதிப்றாஹீம்
வரிச முத்தும்மாவுக்கு
புதல்வராய் …-0-
அது
இருண்ட பூமிக்குள்,
நீதி- நேர்மை- நியாயம் – என்ற
கொள்கை
குத்து விளக்குகளை
ஏந்திக்கொண்டு
புறப்பட்டது..
சமூக விடியலுக்காய் !-0-
மணவயதில்
மணந்தார்
நான்காம் குறிச்சி
நங்கை பாத்தும்மாவை!
-0-
கால்நூற்றாண்டுகளுக்கும்
மேலாய்
காத்தபதியின்
நகராட்சிமன்றின் – நல்
முதல்வராய் பூத்த
மூத்தபதி இவர்
-0-இது
இனியும் எழுதப்படாத
எங்கள்
மண்ணின்
தங்கக் காலம் -என
தவிக்கிறார் தாய்க்குலம் இன்றும்-0-
கோடைகாலத்துக்
குளத்தைப் போல…
இவரது வங்கிப்புத்தகமும்
வறண்டு கிடந்ததாய்
வரலாறு சொல்கிறது.!-0-
ஆனாலும்
அந்த ஆத்மா
வெந்து வடியும்
கண்ணீருக்காய்
விடியும் வரை
உழைத்தது!-0-
அதனால்
மனித மஹாத்மா -என
மனங்களைத் தொட்டார்!-0-
இவற்றோடு
இலஞ்சம், ஊழல், மோசடி – என்ற
சமூகொள்ளி நச்சுப் பாம்புகளும்
சந்துக்குள்ளேயே
சமாதியாகிப்போகின
அந்தக்காலத்தில்…
-0-படமாளிகைக்கு
இடமளிக்காது
துரத்திய
தூரநோக்கும்,
வாடிவீடுகட்ட வந்த
கோ(கே)டிகளுக்கு
குனியாத போக்கும்-இன்று
இஷுலாமிய தேசமென்று
இன்றைய
இளைய தலைமைகள்
இலட்சனை
பலகை எழுத உதவிற்று!
-0-பொது விளையாட்டு மைதானம்
மக்கள் சந்தை -இவைகள்
சிலாகித்து சொல்லும்
முதன்மை சாதிப்புகள்!
-0-இவரது பொற்காலத்தில்
‘மின்சாரம்’
முதற்தடைவையாய்
ஒளிர்ந்து
மனங்கள்
பனிமலாராய் பூரித்தது!
சூரியனைக்கண்டு
மலரும் காந்தி மலர்களைப்போல
கல்வி கலாச்சாரம்
எல்லாமே
களை கட்டத் தொடங்கியது!
-0-அரிக்கும் ‘அரிசியில்’
அரைபிடியாவது
அள்ளிக் கொடுத்து
உதவுங்கள்- என்று
‘ஜாமிஅதுல் பலாஹ்வை’
பகலிரவாய்
இமையால் காத்து
இமயமாக்கினார்.
-0-மக்களோடு மக்களாய்
மார்க்கட் சதுக்கத்தில்
மடிகாலிலிருந்து கொண்டே
‘பஞ்சாயத்து’
நடாத்துவார்-0-
இவற்றுக்கப்பால்;….
இலட்சங்களும்,
கோடிகளும் இவரைத்
தேடிய போதும்
அழ்ழாஹ்வுக்கே அஞ்சினார்!
-0-அதனால்
களுகுகள் -நோக்கி
அவரை
வட்டமிட்டபோதும
வெற்றி முரசு கொட்டி
வெள்ளமாய் மக்கள்
சுமந்து வந்தார்கள்!
காற்றுப்போன பலூனாய்
தோற்றுப் போனது
துரோகிகள் கூட்டம் !
-0-மட்டுமா?
காதரும், கந்தசாமியும்
கட்டிப்பிடித்து
இவரது மறைவில்
கதறிய ஓலங்களில்
ஊரே சோகத்தால்
உறங்கிப்போனது!
-0-இவைகள்
நாம் காணும்
இன்றைய
இனநல்லுறவுக்கான
நேற்றைய அஷ்திவாரங்கள் !
-0-என்ன செய்வது
எழுபதுகளில் -இந்த
இமயம் -இயல்பாய்
இறையடி சென்றத!-0-
மூத்த மண்
பூத்த மண் – அவர்
இமையால் காத்தபதி
கண்ணீரால்
குளித்தது!
Published by

Leave a comment