மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM. ஹாரிஸ் JP அவர்களை இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளராக தெரிவு

haris பழுலுல்லாஹ் பர்ஹான், முகம்மட் றிப்கி, 

காத்தான்குடி: இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளராக காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனடிக்கடிதம் நீர்கொழும்பு லகூன் வீவ் ஹோட்டலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் பணிப்பாளர் பேராசியர் ஜெயந்த களுபோவிலவினால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் 26 உறுப்பினர்களும் இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளர்.

இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு அதனை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டது.

தற்காலிகமாக இலங்கை மனித உரிமைகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் காரியாலயமாக காத்தான்குடி டெலிகோம் வீதியில் இலங்கை வங்கிக்கு அருகாமையிலுள்ள காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் காரியாலயம் செயற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஒன்றியத்தின் தலைவர் அல்ஹாஜ் MIM. ஹாரிஸ் JP அவர்களுக்கும் மக்கள் ஒன்றிய அமைப்பின் உறுப்பினர்களுக்கும் எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

harisharis 1haris2

 

  

Published by

Leave a comment