கிண்ணியா: சென்ற மாதம் 19 ஆம் திகதி கால் நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரால் விடுக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமான அறிவித்தலின் பிரகாரம் விலங்குகளுக்கு கால்வாய் நோய் பரவியுள்ளதெனவும் இதில் சில மாவட்டங்கள் நோயின் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது சம்பந்தமான கலந்துரையாடலொன்று கிண்ணியா நகரசபையின் நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபையில் இன்று இடம்பெற்றன.
கால்வாய் நோயானது பெப்ரவரி நடுப்பகுதிக்கு முன்னர் காணப்பட்டதாகவும் இந்த கால்வாய் நோய் தொற்றின் போது 6 வகையான நோய் கிருமிகள் உள்ளதாகவும் இதில் வீரியம் குறைந்த வைரஸினால் மனிதனுக்கு தீங்கு ஏற்படுவது குறைவு எனவும் கால்நடை வைத்தியர் தெரிவித்தார்.
இதன்போது கலந்து கொண்டவர்கள் தங்களது ஆலோசனைகளையும் தெரிவித்தனர். இங்கு டொக்டர் குறிப்பிடும் போது திருகோணமலை மாவட்டத்தில் சில பகுதிகளில் இந்நோயின் தாக்கம் உள்ளதாகவும் அது கிண்ணியாவை பொருத்தமட்டில் குறைவெனவும் தெரிவித்ததுடன் சில பட்டிகளில் காணப்படும் மாடுகளுக்கு தான் மருந்துகள் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலின் போது கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கிண்ணியா பிரசேத சபை, கிண்ணியா பிரதேச செயலக உதவி செயலாளர், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி, கிண்ணியா பொலிஸ் ஐ.பி ஜிப்ரி, கால்நடை வைத்தியர் டொக்டர் செனவிரத்தின பண்டா, நகரசபை செயலாளர் யாழினி நரேந்திரநாத், மாட்டிறைச்சிக் கடை உரிமையாளர்களும் இதன்போது கலந்து கொண்டனர்.
Published by


Leave a comment