காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல்களை வெளிக்கொணரவும் திறமைகள் மற்றும் புரிந்துணர்வினை மேற்கொள்ளவும் இன உறவினை மேலும் பலப்படுத்துவதற்குமான கலை கலாசார நிகழ்வுடன் விளையாட்டு நிகழ்வு ஒன்று நேற்று காத்தான்குடி கடற்கரை வளாகத்தில் இடம்பெற்றது.
ஆண்களுக்கும் பெண்களுக்குமாக நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் கூகுள் யாகு மற்றும் ஒபேரா என மூன்று இல்லங்களாக உத்தியோகத்தர்கள் பிரிக்கப்பட்டு அவற்றிற்கு புள்ளிகளும் வழங்கப்பட்டன
இதில் கிராம நிறுவாக உத்தியோகத்தர் கோமலேஸ்வரன் தலைமையிலான கூகுள் அணி 120 புள்ளிகளுடன் 1ம் இடத்தினையும், திட்டப்பணிப்பாளர் கருணாகரன் தலைமையிலான யாகு அணி 96 புள்ளிகளைப் பெற்று 2ம் இடத்தினையும், உதவிப்பிரதேச செயலாளர் அப்கர் தலைமையிலான ஒபேரா அணி 85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தினையும் பெற்றன.
மேற்படி நிகழ்வுகள் பிரதேச செயலாளர் எஸ். எச். முஸம்மில் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Published by




Leave a comment