காத்தான்குடி: 100 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ள காத்தான்குடி ஆற்றங்கரை வீதியை அண்டிய பகுதிகளை பொருளாதார இபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா நேற்று நேரடியாக பார்வையிட்டார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நகர சபைத்தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அல்ஹிறா வித்தியாலய அபிருத்திச்சங்க செயலாளரும் சமூக சேவகருமான எம்.ஐ.எம் றசீட் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.
பொருளாதார அபிருத்திப் பிரதியமைச்சர் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்
‘காத்தாக்குடி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும் அதிலும் குறிப்பாக ஆற்றங்கரையின் அண்டிய பகுதிகள் ஆச்சரியப்படும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மஞ்சந்தொடுவாய் வரை கொங்கிறீட் வீதி, பல விளையாட்டுக்கள் விளையாடக்கூடிய விளையாட்டு மைதானம், மேயருக்கான விடுதி வசதி, பெண்கள் கூட்டம் வைப்பதற்கான கூட்ட மண்டபம், வாராந்தச் சந்தை, பூங்காக்கள் பொழுதைக்கழிப்பதற்கான பொழுது போக்கு சாதனங்கள் சிறுவர்களுக்கான நீச்சல் தடாகங்கள் மற்றும் நவீன மயப்படுத்தப்பட்ட சிறுவர் பூங்காக்கள் மீனவர்களுக்கான மீன்பிடி வசதிகள் மற்றும் அவர்களுக்கான தங்குமிடங்கள் போன்றவை இப்பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளதாக’வும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
Published by




Leave a comment