காத்தான்குடி: அல்மனாரின் சிட்டி கெம்பஸ் மற்றும் இஸ்லாமிய இளைஞர் முன்னணி இணைந்து சிட்டி கெம்பஸின் 1 வது கிளையை சனி (01.03.2014) பிற்பகல் 04.00 மணிக்கு காத்தான்குடி முதலாம் குறிச்சியில் அமைந்துள்ள இஸ்லாமிய இளைஞர் முன்னணி வளாகத்தில் மிக விமர்சையாக திறந்து வைத்தது.
இந்த நிகழ்வை MHAM இஸ்மாயில் (SLEAS) பணிப்பாளர், அல்மனார் நிறுவனம்) அவர்கள் தலைமை தாங்கி நடாத்தினார். இதில் பிரதம அதிதியாக அல்ஹாஜ், கௌரவ பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்களும், கௌரவ அதிதிகளாக அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் (பொறியியலாளர், மாகாண சபை உறுப்பினர்) அவர்களும், அல்ஹாஜ்,கலாநிதி ஆ. பஹ்மி இஸ்மாயில் (முன்னால் தேசிய ஆலோசகர் (UN-HABITAT) அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததோடு விஷேட அதிதிகளாக அல்ஹாஜ் யு.டு.யு ஜவாத் BA, அல்ஹாஜ் அஷ்ஷெய்க் SM. அலியார் (பலாஹி, மட்டக்களப்பு மாவட்ட ஜ.உலமா சபை தலைவர், காதி நீதிபதி) , அல்ஹாஜ்,அஷ்ஷெய்க் ALM மும்தாஸ் (BA, மதனி, செயலாளர் நாயகம் – அல்மனார் நிறுவனம் ) அவர்களும், மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Published by




Leave a comment