கொழும்பு: வடக்கிலும் கிழக்கிலும் வாழும் மக்கள் அனுபவித்துவரும் அபிவிருத்திகளை ஏன் தலைநகர் வாழ் மக்கள் பெறக் கூடாது என்று கேள்வியெழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அதனை இங்கும் கொண்டுவருவதற்கு இந்தேர்தலில் உங்களது ஆணையினை தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேல் மாகாண சபை தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் எம்.எஸ்.பழீலினை ஆதரித்து கொம்பனி வீதியில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேற்கண்மடவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசும் போது,
கொழும்பு வாழ் மக்களது பிரச்சினைகள் ஏராளம். ஆனால் அவர்கள் அப்பிரச்சினையின தீர்த்துக் கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்றனர். இவர்களுக்கான சரியான பிரதேச தலைமைத்துவங்கள் இன்மையே இதற்கு காரணமாகும். இந்த தலைமைகளை உருவாக்குவதற்கு இன்று மக்கள் தயாராக இருக்கின்றனர். அதற்கான களத்தை எமது கட்சி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
எமது கட்சியின் இப்பிரதேச வேட்பாளராக பழீல் அவர்கள் போட்டியிடுகின்றார். அவர்கள் மக்கள் மீது அன்பு கொண்டவர்தான் அரசியலுக்குள் வர முன்பிருந்த மக்கள் பணி செய்கின்றார். அவரின் சேவையால் ஈர்க்கப்பட்ட மக்கள் வெள்ளத்தை இங்கு கானுகின்றேன்.இந்த தேர்தல் முடிவுகள் எமது கட்சியின் வெற்றியை இ்ன்ஷா அல்லாஹ் உறுதி செய்யும். எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி என்பது அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர், 6 மாகாண சபை உறுப்பினர்கள், 4 பிரதேச சபைகளின் தலைவர், உள்ளிட்ட 61 உள்ளுராட்சி சபைகளின் உறுப்பினர்களை கொண்டது. பலமிக்க ஒரு சிறிய கட்சியாக இருந்துவருகின்றது.
எமது கட்சியில் முஸ்லிமகள் மட்டுமல்ல தமிழ் மற்றும் சிங்கள சகோதரர்கள் உறுப்பினர்களாக இருந்து பணியாற்றுகின்றனர். நாங்கள் மக்களுக்கு பணியாற்றுவதால் மக்கள் இன்று எங்களுடன் இருக்கின்றனர். இந்த தேர்தர்தல் நீங்கள் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொருவாக்குகளும், இம்மாவட்ட மக்களது வாழ்க்கையின், மாணவ சமூகத்தின் கல்வி எழுச்சிக்காக இடப்படும் அத்திவாரம் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.
Published by

Leave a comment