நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு காத்தான்குடியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்பு

unnamed (5)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மக்கள் இயக்கத்தின் தலைமைக் காரியாலய வளாகத்தில் இன்று 02 ஞாயிற்றுக்கிழமை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தலைமையில் இடம்பெற்றது.

இங்கு இம் மகாநாட்டின் ஆசி உரையை மட்டக்களப்பு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) நிகழ்த்தினார்.

இம் மகாநாட்டின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் 60 பேர் கொண்ட காத்தான்குடி பிரதேசத்திற்கான சூறா சபை உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் காத்தான்குடி நகர சபைக்கான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான மீள் அழைத்தல் ஒழுங்கில் புதிய நகர சபை உறுப்பினர் எஸ்.எச். பிர்தௌஸ் ஆசிரியர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன் 7விடயங்கள் அடங்கிய நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாட்டின் பிரகடனமும் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் பிர்தௌஸ் நளீமியினால் வாசிக்கப்பட்டு முன்மொழியப்பட்டது.

ஆயிரத்துக்கு மேற்பட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் ஆண்,பெண் ஆதரவாளர்கள்,பொது மக்கள், கட்சி முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்ட இம் மகாநாட்டில் முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் நளீமி,நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணியின் தலைவர் அஷ்ஷேய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் (இஸ்லாஹி),கலந்துரையாடலுக்கும் ஆய்வுக்குமான மத்திய நிலையத்தின் தலைவர் சிறாஜ் மஷூர் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் மூதூர் கிளை செயற்குழு உறுப்பினர் டாக்டர் கே.எம்.ஸாஹிர் , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறப்பினர்களான பொறியியலாளர் பழுலுல் ஹக்,சபீல் நளீமி,டாக்டர் றிபாஸ்,மன்சூர்,ஆசிரியர் பிர்தௌஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment