கண் சத்திர சிகிச்சை செய்யப்பட்டோர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்

WP_20140228_018– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் பிரதி வியாழக்கிழமைகளில் நடைபெற்றுவரும் கண் கிளினிக் வரும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவதானிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் கண்களில் வெண்படலம் (Cataract) உள்ள நோயாளர்கள் இனம்காணப்பட்டு அவர்களுக்கு இலவசமாக சத்திர சிகிச்சையளிக்கும் நடவடிக்கை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டது.

இச் சத்திர சிகிச்சைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அம்பியுலன்ஸ் வண்டி மூலமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்ட்டு அங்கு சத்திர சிகிச்சை செய்யப்பட்டபின் மீண்டும் அம்பியுலன்ஸ் வண்டி மூலமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நோயாளர்கள் கொண்டுவரப்பட்டு ஒரு நாள் தங்கி சிகிச்சை மற்றும் பராமரிப்பின் பின்னர் வீட்டிற்கு அனுப்பபடுகின்றனர் எனவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் MSM .ஜாபிர் தெரிவித்தார்.

WP_20140301_009WP_20140301_013WP_20140228_018

 

 

Published by

Leave a comment