அல்-மனார் சிட்டி கெம்பஸின் முதலாவது கிளை திறப்பு விழா

unnamed (1)பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: அல்-மனார் நிறுவனத்தின் சமூக சேவையின் மற்றுமொறு படிக்கல்லாக அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியில் தனி ஒரு பிரிவாக வாழ்க்கைக்கு தொழில் ,தொழிலுக்கு செய்திறன் எனும் தொனியில் பல்வேறு கணணி தொழிற் பயிற்சி நெறிகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட சிட்டி கெம்பஸின் முதலாவது கிளை திறப்பு விழா நேற்று 1 சனிக்கிழமை மாலை காத்தான்குடி முதலாம் குறிச்சி ஆற்றங்கரை பிரதேசத்தில் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னனியின் கட்டிடத்தில் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பணிப்பாளர் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சிறந்த சமூக சேவையாளர் கலாநிதி எம்.பஹ்மி இஸ்மாயில் ஆகியோர் சிட்டி கெம்பஸை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் கெம்பஸின் பெயர் பலகையும் திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், மட்டு,காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவரும்,காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி) ,காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் சட்டத்தரணி அப்துல் ஜவாத், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதியும், மரண விசாரணை அதிகாரியுமான சட்டத்தரணி எம்.ஐ.எம்.நூர்தீன்,காத்தான்குடி பிரதேச கோட்டக்கலவிப் பணிப்பாளர் சுபைர், இஸ்லாமிய இளைஞர் முன்னனியின் தலைவர் பி.எம்.எம்.மர்சூக், முன்னனியின் பிரதித் தலைவர் எம்.ஏ.ஜாபிர்,அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் மும்தாஸ் (மதனி) , சிட்டி கெம்பஸின் பணிப்பாளர்எம்.நவ்ஸாத்,உட்பட உலமாக்கள் ,ஊர் பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

இந்த சிட்டி கெம்பஸை காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னனியும் காத்தான்குடி-அல்-மனார் நிறுவனமும் இணைந்து இளைஞர் முன்னனியின் கட்டிடத்தில் குறைந்த கட்டணத்தில் பாடநெறிகளை நடாத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment