PMGG யின் தேசிய மாநாடு காத்தான்குடியில் நாளை நடைபெறுகிறது……..

PMGG media unit.
is (1)நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு நாளை (ஞாயிறு) காலை 09.30 மணிக்கு காத்தான்குடியில் நடைபெறவிருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் யாவும் பூரணமாகியுள்ளன. காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள PMGG யின் தலைமைக் காரியாலய வளாகத்திலேயே இத் தேசிய மாநாடு வெகு விமர்சைiயாக நாளை நடைபெறவிருக்கிறது.
இம்மாநாட்டுக்கு காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, தோப்பூர், மூதூர், கிண்ணியா, அக்கரைப்பற்று, பொத்துவில், நிந்தவூர், மருதமுனை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் யின் PMGG அதிதிகளும் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெருந்தொகையாக கலந்து கொள்ளவிருப்பதோடு வடமகாணத்திலிருந்தும் ஏனைய பிரதேசங்களிலிருந்தும் பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இம் மாநாடு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் அரங்கில் நடாத்துவதற்கான சகல உத்தியோக பூர்வ அனுமதிகளும் முன்கூட்டியே பெறப்பட்டிருந்த போதிலும் இம்மாநாட்டை தடுத்து நிறுத்தும் நோக்கில் இறுதி நேரத்தில் இம்மாநாட்டுக்கான அனுமதியினை ஹிஸ்புல்லாஹ் தரப்பினர் தலையிட்டு இரத்து செய்திருந்தனர்.

இருப்பினும் இன்ஷா அல்லாஹ் இம்மாநாடு திட்டமிட்டபடி காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள PMGG தலைமைக் காரியாலய வளாகத்தில் வெகு விமர்சையாக நாளை (02.03.2014) காலை 09.30 மணிக்கு நடைபெறும் என்பதை எமது சூறாசபை தெரிவித்துக் கொள்கிறது.

Published by

Leave a comment