‘மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும்’- அமைச்சர் றிஷாத்

rishad– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

கொழும்பு: இலங்கையின் பத்திரிகை துறையில் நீண்டகாலம் தன்னை அர்ப்பணம் செய்து தமிழ் பேசும் மக்களுக்கு தமது பணியினை செவ்வனே செய்த மூத்த ஊடகவியலாளர் எம்.ஏ.சீ.முஹம்மத் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பேரிழப்பாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் அன்னாரின் சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

மர்ஹூம் எம்.ஏ.சீ.முஹம்மத் தமிழைப் போன்று சிங்களத்திலும் பணியாற்றக் கூடியவராக இருந்துவந்துள்ளார்.பாராளுமன்ற செய்தியாளராக சில காலம் இவர் பற்றியுள்ளார்.இவரது பாராளுமன்ற செய்திகளை வாசிக்கும் சந்தர்ப்பம் தமக்கு கிடைத்ததாகவும், அதன் தினக்குரல் பத்திரிகையில் நோன்பு னால சிந்தனைகளை எழுதியும் வந்துள்ளார்.

சிரேஷ்டத்துவமான ஊடகவியலாளர்களுக்கு உள்ள பண்பினை மர்ஹூம் எம்.ஏ.சீ.முஹம்மத் கொண்டிருந்ததாகவும்.எல்லோருடனும் பழகக் கூடியவராகவும் இவர் இருந்துள்ளதுடன்,முஹம்மத் நானா என்று ஊடகவியலார்கள் மற்றும் அரசியல்வாதிகள் அவரை அழைப்பதையும் இந்த சந்தரப்பத்தில் நினைவுபடுத்துவதன் மூலம் அவரது நெருக்கமான செயற்பாடை அறிந்து கொள்ளமுடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் றிசாத் பதியுதீன்,அன்னாரின் பிரிவினால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் ஊடகத் துறையினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த கவலையினையும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment