‘தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள்’

RISHATH[1]– கொழும்பிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா, ஏ.எஸ்.எம்.இர்ஷாத் 

கொழும்பு: தமது கட்சி்க்குள்ளேயே ஒற்றுமையினை ஏற்படுத்த முடியாமல் பல துருவங்களாக பிரிந்து காணப்படும் ஜக்கிய தேசிய கட்சி கொழும்பு வாழ் மக்களுக்கு எதை சாதித்துக்காட்டப்போகின்றார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், இவர்களுக்கு வாக்களிப்பதானது தொடர்ந்தும் எமது அபிவிருத்தியினை நாங்களே இல்லாமல் செய்யும் ஒன்றாகும் என்றும் கூறினார்.

மேல் மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்எம்.லாபிர் ஹாஜியாரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று இரவு (2014.02.28) மாளிகாகந்தவில் இடம் பெற்ற போது அதி்ல் உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக், கட்சியின் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ்.ஹமீட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமிர் அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் உயர் பீட உறுப்பினர் தொழிலதிபர் அன்வர் ஹாஜியார் உட்பட பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர்.

இங்கு அமைச்சர் மேலும் பேசுகையில் கூறியதாவது –

இன்றைய தேர்தல் கலத்தில் ஏன் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவரது கட்சியின் வேட்பாளர்களை கொழும்பில் நிறுத்தியிருக்கின்றார் என்ற கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளதை அறிய முடிகின்றது. இதற்கு பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பாகும்.எமது கட்சியின் உருவாக்கம் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் நலன் குறித்தும் அவர்களது அரசியல் அந்தஸ்த்து, பாதுகாப்பு, தேவைப்பாடுகள் என்பன பற்றிய பார்வையினையே கொண்டதாக அமைந்திருந்தது.கடந்த பல தேர்தல்களில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டியிட்டு மக்களின் வாக்குப்பலத்தை பெற்று பாராளுமன்றத்திலும், மாகாண சபைகளிலும், உள்ளுராட்சி மன்றங்களிலும் இருந்து மக்கள் பணியினை செய்து வருகின்றது.

இவ்வாறானதொரு சந்தர்பப்த்தில் வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை மக்கள் எமது செயற்பாடுகளை அவதானித்து இவ்வாறான பணிகள் கொழும்பு மாவட்டத்திற்கும் வரவேண்டும் என்று எம்மை பல முக்கியஸதர்கள் வந்து சந்தித்து வேண்டுகோளினை முன் வைத்தனர்.

இன்று தலைநகர் கொழும்பில் வாழும் மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நாம் கானுகின்றோம்.இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண சபையின் அதிகாரங்கள் தேவை.இதனை பெற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் தேவை இஅதற்காக எம்மோடு இருக்கக் கூடிய, செயற்திறன் மிக்கவர்களை அங்கு அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்பட்டது.கொழும்பில் நாங்கள் பணியாற்ற வேண்டும் என்றால் மக்கள் எமக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.அந்த அங்கீகாரத்தையும், அனுமதியினையும் பெற்றுக் கொள்வதற்காகவே எமது கட்சி கொழும்பில் போட்டியிடுகின்றது.

இன்று கொழும்பின் சிறுபன்மை மக்களின் கல்வி நிலை தொடர்பி்ல் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.பரீட்சை பெறுபேறுகள் மிகவும் பின்தங்கிய நிலையினை உருவாக்கிவிடும் அச்சம் எற்படடுள்ளது.இதனை தடுத்து நிறுத்தி மாணவர்களுக்கு கல்வி தொடர்பான் ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, மாகாண சபை மூலம் வளங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.அதற்கான அங்கீகாரமாக எமது மயில் சின்னத்திலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் களம் இறங்கியிருக்கின்றது.

இந்த அரசாங்கம் பலமிக்கதாக இருக்கின்றது.எமது தனித்துவமான அடையாளத்துடன் சிறுபான்மை மக்களின் குரலாக நாம் இயங்கிவருகின்றோம்.இந்த அமைச்சுப் பதவிகளைவைத்துக் கொண்டு நலிவுற்ற மக்களுக்கு எதனையெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்துவருகின்றோம். அண்மைய காலத்தில் கொழும்பில் இடம் பெற்ற பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடமும்இஅமைச்சரவையிடமும் எமது அளுத்தத்தை தெரிவித்துவந்துள்ளோம்.எமது கட்சியின் வெற்றியின் மூலம் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமான நன்மைகளை அடையப் போகின்றார்கள் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்.

Published by

Leave a comment