ஆசியக் கிண்ணம்: சொந்த மண்ணில் மண் கவ்விய பங்களாதேஷ்: ஆப்கான் அசத்தல் வெற்றி
இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்!
– MJ
பதுல்லாஹ்: ஆசியக் கிண்ணத்தின் 5வது போட்டி நேற்றிரவு பங்களாதேஷ்-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையில் பதுல்லாஹ் மைதானத்தில் இடம்பெற்றது.
இப்போட்டியில் பங்களாதேஷ் அணி தனது சொந்த மண்ணில் அறிமுக ஆப்கானிஸ்தான் அணியுடன் 32 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவி, இச்சுற்றுப்போட்டி அட்டவணையில் பின்தள்ளப்பட்டிருக்கின்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கட் இழப்புக்கு 254 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 47.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை மாத்திரமே பெற்று, தோல்வியைத் தழுவிக்கொண்டது.
சமியுல்லாஹ் சென்வாரி
போட்டி நாயகனாக ஆப்கான் அணியின் சமியுல்லாஹ் சென்வாரி தெரிவு செய்யப்பட்டார்.
ஆசியக் கிண்ணத்தின் மற்றுமொரு முக்கிய போட்டியும், உலக கிரிக்கட் இரசிகர்களைக் கவர்ந்த போட்டியாகவும் கருதப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை டாக்கா மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment