காத்தான்குடி: எதிர் வரும் ஞாயிற்றுகிழமை மாலை 4 மணிக்கு மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக் இனால் நடாத்தப்படும் 12 அணிகள் கலந்து கொள்ளும் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு மற்றும் முதலாவது போட்டியும் நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் அனைத்தும் வெள்ளி, சனி ஞாயிறு, தினங்களில் மத்திய மகா வித்தியாலய விளையாட்டு மைதானம், பூநொச்சிமுனை தாருஸ்ஸலாம் விளையாட்டு மைதானம், பாலமுனை நேசனல் விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடைபெறும்.
ஆரம்ப விழாவில் பிரதம அதீதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரும் காத்தான்குடி கால்பந்தாட்ட லீக்கின் தலைவருமான மாண்பு மிகு MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள். சுற்றுப்போடியின் சகல நடுவர் ஏற்பாடுகளையும் காத்தான்குடி நடுவர் சம்மேளனம் மேற்கொள்ளும்.
Published by
![football-fifa-world-cup-portugal-sweden-cristiano-ronaldo_3036328[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/football-fifa-world-cup-portugal-sweden-cristiano-ronaldo_30363281.jpg?w=150&h=79)
Leave a comment