-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:இன்றைய நவீன காலத்திற்கு உகந்த அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அன்றாட தேவைகளுக்கான பல்வேறு பட்ட பயிர்களை நடும் புதிய வழிகாட்டல் ERO-GARDENS நிறுவனம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அல்ஹாஜ்.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்MA/MPஅவர்களினால்இன்று காலை திறந்துவைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வு பிரபல சமூக சேவையாளர் கௌரவ அல்ஹாஜ்.எம்.பசீர் jp (அஷ்ஷாபியா) தலைமையில் நடை பெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் அல்ஹாஜ். சிப்லி பாறூக்,பிரதேச செயலாளர் அல்ஹாஜ்.எஸ்.எச்.முஸம்மில் slas,முன்னால் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அல்ஹாஜ்.யு.எல்.என்.எம்.முபீன்BA,நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் அல்ஹாஜ். அப்துர்றஹ்மான் Eng, மற்றும் ஏ.ஜீ.எம்.ஹாறூன், சட்டத்தரணி ஏ.எல்.ஏ.ஜவாத் BA, உட்பட பல அதிகள் மேற்படி திறப்பு விழாவினில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
காலத்தின் தேவைக்கேற்ப எம்மிடமுள்ள வெற்றுக் காணிகளிலும் தக்காளி,கொச்சிக்காய்,கத்தரிக்காய்,பப்பாசி,வாழை,இஞ்சி,போன்ற மேலும் பல வீட்டுப் பயிர் செய்கையினையும் செய்வதற்கான வழிகாட்டல்கள்,ஆலோசனைகளையும் பொது மக்களுக்கு வழங்க முன் வந்தள்ளனர் ஈறோ-காடன்ஸ் நிறுவனத்தினர்.
More…….
EUR-GARDENS
No-327 Beach Road,
New kattankudy.
Tp-0777266192







Leave a comment