சன்மார்க்க சமுத்திரம் ஜமியதுல் பலாஹ்

falahகவிஞர் – இல்மி அஹமட் லெவ்வை

இஸ்லாமிய தேசமென்று –
இலட்சனை எழுத
உதவிற்று
இலங்குகின்ற பலாஹ்!

-0-

மூலை முடுகெல்லாம்
மஸ்ஜிதுகளும்
மார்க்க மேதைகளும்
நிறைந்து
மறைஒளி வீசும்
மண்ணாய்
மணக்கச் செய்தது
மார்கக்கல்லூரி பலாஹ்!

-0-

கருணைமிகு
கல்புகளையும்
கண்ணீர் துடைக்கும்
கரங்களையும்
ஊருகாய் உருவாக்கியது பலாஹ்!

-0-

ஒரு
காலத்தில்
கரி மருந்துகளும்
காற்ரலைகளும்
குலுக்கியபோது –
காவலரணாய்
காத்து நின்றது –
காத்த நகரை -மூத்த
பலாஹ்வின்
முதல்வர் குழு !

-0-

மட்டுமா ?
மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம்
மகளிர் மார்க்கக் கல்லூரிகள்
தஹ்வா தளங்கள்-என்று
ஆத்மீக அஹக் கற்றல் துறைமுகங்களின்
தோற்றுவாயும்
ஜமியதுல் பலாஹ்தான் !

-0-

கலாநிதிகள்
மதனிகள்
ரியாளிகள் -என்று
சன்மார்க்க நதிகள் ஊற்றெடுத்ததும் -இந்த
சமுத்திரத்திலிருதுதான் !

-0-

பல்நூறு ‘பலாஹிகள் ‘ஊற்றடுத்த
சன்மார்க்க சமூத்திரமே !
இன்னும் பல்லாயிரம் நதிகள் பெருக்கெடுத்து
பார் முழுதும் மறை மணம் கமழ
வல்லோனை
வேண்டுகின்றேன் !

Published by

Leave a comment