-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியில்; மார்க்க கல்வியினை முடித்துக் கொண்ட மௌலவி-ஹாபிழ்களுக்கான பட்டமளிப்பு விழா (27.02.2014 வியாழக்கிழமை)இன்று மிக சிறப்பாக இடம் பெற்றது.
காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்வின் முதல்வர் மௌலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்லாஹ்(றஹ்மானி) ‘ஷைகுல்பலாஹ்’ அவர்களின் தலைமையில் மேற்படி விழா நடைபெற்றது.
இன்றைய விழாவின் போது காத்தான்குடி,வாழைச்சேனையை சேர்ந்த ஏழு மாணவர்கள் மௌலவிகளாக பட்டம் பெற்றனர்.
மேலும் ஒன்பது மாணவர்கள் அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களாக பட்டம் பெற்றனர்.
இந்நிகழ்வின் போது காத்தான்குடி,ஏறாவுர்,ஓட்டமாவடி,வாழைச்சேனை,உட்பட பல ஊர்களையும் சேர்ந்த ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரியின் முன்னால் மாணவர்கள்(மௌலவிமார்கள்)பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேற்படி நிகழ்வுக்கு உள்ளுர்,வெளியுர் அரசியல் பிரமுகர்கள்,புத்தி ஜீவிகள்,மார்க்க அறிஞர்கள்,உலமாக்கள்,சம்மேளன உறுப்பினர்கள்,ஊடகவியலாளர்கள்,என பலரும் கலந்து கொண்டனர்.பட்டம் பெற்ற மௌலவிமார்கள்
மௌலவி;. எம்.எஸ்.எம்.பயாஸ்(பலாஹி)
மௌலவி;. எம்.எச்.எம்.அனஸ் (பலாஹி)
மௌலவி;. எம்.எம்.எம்.நுஸ்ரி (பலாஹி)
மௌலவி;. எம்.ஜே.எம்.ஜப்றான் (பலாஹி)
மௌலவி;. எம்.ஏ.எம்.ஹபிழ் (பலாஹி)
மௌலவி;. எம்.ஏ.எம்.அஸீபர் (பலாஹி)
மௌலவி;. ஜ.எம்.சப்னாஸ் (பலாஹி).
ஹாபிழாக பட்டம் பெறும் ஒன்பது மாணவர்கள்.விசேட நிகழ்வாக…..
‘ஷைகுல் பலாஹ்’ அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹூம் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களது சிறப்புக் கூறும் ‘எங்கும் இலங்கும் இரு மணிகள்’ என்னும் நூல் வெளியீடும் இடம் பெற்றது.
Published by







Leave a comment