-டீன் பைரூஸ்-
காத்தான்குடி:புதிய காத்தான்குடி மம-மட்-அன்வர் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திக் குழுவின் ஏற்பாட்டினில் சிரமதானப்பணி பாடசாலையில் நடை பெற்றது.புதிய காத்தான்குடி மட்-அன்வர் வித்தியாலயத்தினில் சுமார் 700 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
மேற்படி பாடசாலை விடயத்தில் மிக அக்கரையோடு செயல்பட்டு வரும் SDC பாடசாலை மற்றும் மாணவ சமூகத்தின் நலன் கருதி மேற்படி சிரமதானப்பணியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் பாடசாலையின் அதிபர் எம்.முனீர்,பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.எம்.நௌபர் மற்றும் உறுப்பினர்கள்,காத்தான்குடி ‘சீடோ’அமைப்பின் தலைவர் ஏ.பீ.எம்.ஜௌபர்.jp,பொலிஸ்அதிகாரிகள்,பெற்றோர்கள்,மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Leave a comment