காத்தான்குடியில் அதிகரித்துவரும் ஜூம்ஆ தொழுகைகள்: 5ம் குறிச்சி சுற்றுவட்டத்தில் மாத்திரம் இன்று 3 ஜூம்ஆ தொழுகைகள்!!

kattankudy (9)– விசேட நிருபர்

காத்தான்குடி: இலங்கையில் நூறு வீதம் முஸ்லிம்கள் வாழும் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமைகளில் இதுவரையில் ஏழு ஜூம்ஆ தொழுகைகள் இடம்பெற்று வந்தன. காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் கடந்த 14ம் திகதி மீண்டும் ஆரம்பமான ஜூம்ஆ தொழுகையினைத் தொடர்ந்து தற்பொழுது காத்தான்குடியில் எட்டு ஜூம்ஆ தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன.

காத்தான்குடி 5ஆம் குறிச்சி சதுக்கத்தில் மாத்திரம் இன்று மூன்று ஜூம்ஆக்கள் இடம்பெறுகின்றன.  ஜாமியுழ்ழாபிரீன்(சுழற்சி முறையில்) , குபா மற்றும் பதுறிய்யா ஆகிய மூன்று பள்ளிகளிலும் இத்தொழுகைகள் இடம்பெறுவதானது காத்தான்குடியின் மற்றுமொரு சரித்திரமென அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான மூன்று ஜூம்ஆ தொழுகைகள் மூன்று வாரத்திற்கு ஒருமுறை இப்பகுதியில் நிகழும்.

kattankudy

தற்பொழுது காத்தான்குடியில் சுழற்சிமுறையில் இரு ஜூம்ஆ பள்ளிவாயல்கள் (காத்தான்குடி, புதிய காத்தான்குடி), மஸ்ஜிதுல் குபா, இஸ்லாமிக் சென்ரர், காத்தான்குடி 5-பதுறிய்யா, தாருல் அதர், தேசிய தௌஹீத் ஜமாஅத், மற்றும் ஹொஸ்டல் வீதி-முதலாம் குறுக்கு ஒழுங்கை ஆகிய எட்டு இடங்களில் ஜூம்ஆ தொழுகைகள் பிரதி வாரமும் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறான தனிநபர் மார்க்க பிளவுகளின் காரணமாக எதிர்காலத்தில் காத்தான்குடியில் மார்க்கக் குழுக்களும், அதனைப் பிரதிபளிக்கும் ஜூம்ஆ பள்ளிவாயல்களும் மென்மேலும் உருவாகும் வாய்ப்புக்கள் இருப்பதையும் இங்கு அவதானிக்க முடிகிறது.

Published by

One response to “காத்தான்குடியில் அதிகரித்துவரும் ஜூம்ஆ தொழுகைகள்: 5ம் குறிச்சி சுற்றுவட்டத்தில் மாத்திரம் இன்று 3 ஜூம்ஆ தொழுகைகள்!!”

  1. உண்மைய சொன்னா உறைக்கத்தான் செய்யும் Avatar
    உண்மைய சொன்னா உறைக்கத்தான் செய்யும்

    இதற்க்கு முன்னர் பல ஆண்டு காலமாக காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜூம்ஆ நடை பெற்று வந்தது, ஆனால் குபா பள்ளியே புதிதாக முளைத்து ஊரை குழப்பியது.

Leave a comment