தேசத்திற்கு மகுடம் கண்காட்சியில் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் ஊடக நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள்

unnamedபழுலுல்லாஹ் பர்ஹான்

குளியாப்பிட்டிய: வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரில் தற்போது இடம்பெற்று வரும் 8வது தெயட்ட கிருல தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் மக்கள் தொடர்பாடல் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும் ஊடக நிறுவனங்களின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் அரசாங்க தகவல் திணைக்களம்,அரசாங்க அச்சகத் திணைக்களம், அசோசியேட்டற் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லேக் ஹவுஸ் நிறுவனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக் காட்சி ஊடக வலையமைப்பு, இலங்கைப் பத்திரிகைப் பேரவை, இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் உட்பட அரச ,தனியார் அச்சு, இலத்தரனியல், தொலைக் காட்சி, வானொலி ஆகிய ஊடக நிறுவனங்களில் காட்சிக் கூடங்கள் அதன் சேவைகளை மைய்யமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இக் காட்சிக் கூடங்களில் ஊடக நிறுவனங்கள் பயன்படுத்தும் பழைய , புதிய கருவிகள் , நவீன சாதனங்கள், ஊடக நிறுவனத்தின் திறமைகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சின்னங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment