காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்அறபுக் கல்லூரி மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும்- நூல் வெளியீட்டு விழாவும்…

-டீன் பைரூஸ்-

falahகாத்தான்குடி: காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லூரியின் மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும நூல் வெளியீட்டு விழாவும்; எதிர் வரும் 27.02.2014 வியாழக்கிழமை காலை 09.00 மணிக்கு மதரசா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காத்தான்குடி ஜாமிஆவின் முதல்வர் மேளலானா மௌலவி அல்ஹாஜ் எம்.ஏ.அப்துல்லாஹ் ஆலிம் (றஹ்மானி) “ஷைகுல் பலாஹ்” அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக தென் இந்தியா அதிராம் பட்டினத்தை சேர்ந்த (கேரளா றஹ்மாணியா அறபுக்கல்லுரியின் முதல்வர்) கே.டீ. முஹம்மதுக்குட்டி முஸ்லியார்(பாலில் பாகவீ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நிறைவேற்றுக்குழு இணைப்பாளர் கொழும்பு மாவட்ட ஜம்மியதுல் உலமா சபையின் செயளாலர் அஷ்ஷெய்ஹ் எம்.ஏ.சீ.எம்.பாஸில்(குமைதி)அவர்களின் சிறப்புரை இடம் பெறவுள்ளது.

மேற்படி விழாவிற்கு உள்ளுர் வெளியுர் உலமாக்கள் புத்தி ஜீவிகள் மார்க்க அறிஞர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

விசேட நிகழ்வாக…hazarath

“ஷைகுல் பலாஹ்” அவர்களதும் அன்னாரின் சகோதரர் மர்ஹ_ம் அப்துர்ரஹ்மான் ஹாஜியார் அவர்களது சிறப்புக் கூறும் “எங்கும் இலங்கும் இரு மணிகள்” என்னும் நூல் வெளியீடும் இடம் பெறவுள்ளன.

Published by

One response to “காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ்அறபுக் கல்லூரி மௌலவி ஹாபிழ் பட்டமளிப்பு விழாவும்- நூல் வெளியீட்டு விழாவும்…”

Leave a comment