காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் சவால் கிண்ணத்துக்காக காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் (KFL) முதன் முறையாக நடாத்தும் மாபெரும் உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி மார்ச் மாதம் 2ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
காத்தான்குடி வரலாறு காணாத அளவுக்கு இடம்பெற இருக்கும் இச்சுற்றுப் போட்டியில் காத்தான்குடி பதுரியா வி.க, காத்தான்குடி சன்றைஸ் வி.க, பாலமுனை நெஷனல் வி.க, காத்தான்குடி விக்டரி வி.க,ஏறாவூர் லக்கி ஸ்டார் வி.க, காத்தான்குடி சவுண்டர்ஸ் வி.க, பூநொச்சிமுனை மொஹிதீன்ஸ் வி.க, காத்தான்குடி-ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் வி.க.காத்தான்குடி குளோபல் வி.க, பாலமுனை முகைதீன் வி.க, பாலமுனை நியூ கோல்டன் ஸ்டார் வி.க, காங்கயனோடை நியூ ஸ்டார் வி.க. ஆகிய 12 கழகங்கள் இச்சுற்றுப் போட்டியில் பங்கெடுக்கின்றன.
இலங்கை கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் (FFSL) கீழ் கடந்த 13-01-2014 இல் காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது.
இச்சுற்றுப் போட்டியின் சகல போட்டிகளும் காத்தான்குடி மத்திய கல்லூரி, தாருஸ்ஸலாம் பூநொச்சிமுனை, நெஷனல் பாலமுனை ஆகிய மைதானங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பி.ப. 4 மணிக்கு இடம்பெறும்.
பயிற்சி பெற்ற விசேட நடுவர்கள் இச்சுற்றுப் போட்டியில் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புப் பொதுமக்கள் அனைவரையும் இம்மாபெரும் சுற்றுப் போட்டியைக் காண அணிதிரண்டு வருமாரு காத்தான்குடி உதைப்பந்தாட்ட லீக் அன்புடன் அழைக்கின்றது.
Published by
![football-fifa-world-cup-portugal-sweden-cristiano-ronaldo_3036328[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/11/football-fifa-world-cup-portugal-sweden-cristiano-ronaldo_30363281.jpg?w=150&h=79)
Leave a comment