அதிக பணவிரயத்தை போக்கு முகமான செயற்றிட்டமொன்றினை ஆரம்பிக்க சமூக அமைப்புக்கள் ஒன்றிணைவு

BY: FM. Farhan

அல்மனார்

காததான்குடி: பாடசாலைகளில் தகவல் தொழில் நுட்ப இடைவெளிகளைக் குறைத்து அதிக பணவிரயத்தை போக்கு முகமான செயற்றிட்டமொன்றினை காததான்குடியிலுள்ள சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடைமுறைப படுத்தவுள்ளதாக அல்மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ் செய்ஹ் ஏ.எல்.எம். மும்தாஸ் தெரிவித்தார்.

தரம் 10 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை தகவல் தொழில் நுட்ப பாடத்தினை கணிசமான மாணவர்கள் ஆர்வத்துடன் தெரிவு செய்து வருவதினையும், கற்றல் விடயங்களுக்காக ஏனைய பிரதேசங்களுக்கு பிரயாணம் செய்து அதிக பணத்தினை விரயம் செய்வதனையும் கருத்திற் கொண்டு நாம் சமூக நோக்கோடு செய்கின்ற நிறுவனங்களுடன் கைகோர்த்து செயறபடுவதென தீர்மாணித்திருப்பதாகவும் அஷ் செய்ஹ் மும்தாஸ் கூறினார்.

இந்தவகையில் இதற்கென தலைமைக்காரியாலயமொன்று நகர வளாகம் எனும் பெயரில அல்மனார் அறிவியற் கல்லூரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்பம் மற்றும் கட்டட நிர்மாணம் போனற துறைகளை மையப்படுத்தியதாக இந்நிலையம் இயஙகும். இதகைய எமது செயற்பாடுகளுடன் இஸ்லாமிய இளைஞர் முன்னணி என்ற சமூக அமைப்பும எம்மோடு கைகோர்த்திருப்பதாகவும் நகர வளாகத்தின் முதலாவது கிளை எதிர்வரும் 01.03.2014 சனிக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு பொருளாதார அபிவிருததி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாவினால் திறந்து வைக்கப்படவிருப்பதாகவும் அஷ் செய்ஹ் மும்தாஸ் மேலும் பிரஸ்தாபித்தார்.

Published by

Leave a comment