தயட்ட கிருல கண்காட்சியிலிருந்து பழுலுல்லாஹ் பர்ஹான்
குளியாப்பிட்டிய: வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய நகரில் தற்போது இடம்பெற்று வரும் 8வது தயட்ட கிருல தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சியில் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் பௌத்த மத அலுவல்கள் திணைக்களம், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் ஆகியவற்றின் காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இக் காட்சிக் கூடங்களில் பௌத்த, இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களின் வரலாற்று நூல்கள் ,சின்னங்கள், பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Published by

Leave a comment