பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவிப்பு!
கொழும்பு: அரசு முகநூலை (Facebook) நாட்டில் தடை செய்வது தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளில் எவ்வித உண்மையயுமில்லை என்றும் இதனை தடை செய்வது குறித்து அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
பொதுமக்களிடையே பிழையான கருத்துக்களை புகுத்துவதற்கு ஒருசிலர் முயற்சிக்கின்றனர். முகநூல் (Facebook) சமூக வலைத்தளமாகும். அரசாங்கம் இந்த வலைத்தளத்தை தடைசெய்ய எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என்றும், பொய்யான தகவல்களை பரப்புபோர் குறித்து தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட குறிப்பிட்டுள்ளார்.lk
Published by

Leave a comment