கொழும்பு: பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சும் அதன் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த தேசிய அருங்கலைகள் துறைசார்ந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (25) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவில் பிரதம விருந்தினராக மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் கலந்து கொண்டார்.
நாடளாவிய ரீதியில் அருங்கலைகள் சார்ந்த கைவினை கைப்பணியாளர்களது ஆக்கங்கள் மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் கண்காட்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு அதிலிருந்து தெரிவு செய்யப்பட்டு 334 கலைஞர்களுக்கு இன்றைய தினம் விருதுகள், பதக்கங்கள், சான்றிதழ்கள், நிதிப்பரிசில்கள் என்பன வழங்கப்பட்டன.
இதன்பிரகாரம் இரண்டு கலைஞர்களுக்கு தங்கப்பதக்கங்களும் 13 கலைஞர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும் 37 கலைஞர்களுக்கு முதலாம் இடத்திற்கான விருதுகளும், 39 கலைஞர்களுக்கு இரண்டாம் இடத்திற்கான விருதுகளும் 47 கலைஞர்களுக்கு 3ம் இடத்திற்கான விருதுகளும் 196 கலைஞர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நான்கு கலைஞர்களுக்கு விசேட யூரி விருதுகள் வழங்கப்பட்டன
மேன்மை தங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்திசேன, அமைச்சின் மேலதிக செயலாளர் சுசந்த டி சில்வா, திருமதி மங்கலிக்கா அதிகாரி சிரேஸ்ட துணைச் செயலாளர் திருமதி புஸ்பா திட்டப் பணிப்பாளர் அஜித் ஆகியோரால் விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கிக் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதியமைச்சர் வீரகுமார திசாநாயக்க அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவைத் தலைவர் புத்திகீர்த்திசேன ஆகியோர் உரைநிகழ்த்தினர்.
சிரேஸ்ட அமைச்சர் எ.எச்.எம் பௌசி, வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.சந்திரசிறி, பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கைப்பணியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment