லண்டன்: நாஸி இனப்படுகொலையில் தப்பித்த இருபதாயிரம் பேரில் ஒருவரான ஒலிஸ் ஹெடஸ் சோமர் நேற்று லண்டனில் காலமானார். அவரது வயது 110. கடந்த 1903ம் ஆண்டு ஜெர்மன் மொழி பேசு யூத குடும்பத்தில் பிறந்த ஒலிஸ் ஹெடஸ் சோமர், தனது வாழ்நாளில் இரண்டு வருடம் நாஸி வதை முகாமில் அவதிப்பட்டவர்.
கடந்த 1945ம் ஆண்டு நாஸி முகாமில் அடைபட்டு விடுவிக்கப்பட்ட இருபதாயிரம் பேரில் ஆலன் மற்றும் அவரது மகனும் அடங்குவர். ஆனால், பரிதாபகரமாக இவரது கணவர் நாஸி வதை முகாமில் கொல்லப்பட்டார். இவரது ஒரே மகன் கடந்த 2001ம் ஆண்டு புற்றுநோய் தாக்கத்தால் பலியானார்.
இசையின் மீது தீராக் காதல் கொண்ட ஆலன் இசை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தனது இறுதி நாட்களிலும் இசையோடு வாழ்வதையே நேசித்தார் ஆலன்.
இவரது வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஆவணப்படம் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உலப்போரின் போது மரணத்தின் வாசல்வரை சென்று திரும்பிய இவர் தன் திறனால் உயிர்பிழைத்து வந்தார் என்று அவரது குடும்பத்தினர் நினைவு கூர்ந்துள்ளனர்.
எங்கள் பக்கத்தில் அவர் இருந்தார் என்பதே எங்கள் கடினமான நாட்களை இலகுவாக்கின.. இப்போது அவரை இழந்து துக்கத்தில் இருப்பதோடு தனிமையை உணர்கிறோம் என்று அவரது பேரன் ஏரியல் சோமர் துக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
Published by

Leave a comment