துபாய்: கடந்த 21-02-2014 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் பிரத்தியோக பூங்காவான துபாய் சபீல் பூங்காவில் இடம்பெற்ற காத்தான்குடி சகோதர்களின் முதலாவது ஒன்று கூடல் மிகவும் விமர்சையாக நடைபெற்று முடிந்தது (அல்ஹம்துலில்லாஹ்) இதற்க்காக வேண்டி ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கின்ற எமது சகோதரர்கள் சிரமம் பாராது நாலா புறத்திலிருந்தும் வந்து கலந்துகொண்டு தமது ஒற்றுமையை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
இதில் சகோதரர் Mr. Abdul Raheem (Consul General of Sri Lanka in Dubai and Northern Emirates) உம் காத்தான்குடி சகோதரர் என்ற ரீதியில் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் சிறுவர் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களிலும் இவ்வாறான நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்த வேண்டும் என்று பல சகோதர்கள் தாமே முன்வந்து அடுத்த நிகழ்விற்கான பொறுப்புக்களையும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். (அல்ஹம்துலில்லாஹ்). அனைத்து சகோதர்களினுடைய வேண்டுகோளின்படி அடுத்த ஒன்று கூடல் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஏப்ரல் 18ம் திகதி 2014 வெள்ளிக்கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே இத் தகவலை தயவு செய்து கத்தான்குடியைசேர்ந்த அனைத்து சகோதர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
மற்றும் காத்தான்குடி சகோதர்களின் முதலாவது ஒன்று கூடல் தொடர்பான தகவல்களை நமது ஊர் சகோதரர்களிடம் கொண்டு சேர்த்த எல்லா இணையதளங்களுக்கும் ஏற்பாட்டு குழு சார்பாக எமது நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Published by

Leave a comment