காத்தான்குடி: காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு தேசிய மட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் ஏதிர்வரும் மார்ச் மாதம் 2 இரண்டாம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30.மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் வருடாந்த தேசிய மாநாடு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கும் விளக்கமளிக்கும் ஊடக மகாநாடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காத்தான்குடி காரியாலத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த மாநாடு தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமானது காத்தான்குடி நகர சபையில் இரண்டு ஆசனங்களை கொண்டுள்ள எதிர்கட்சி என்ற வகையிலும் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கிடையிலான மீள் அழைத்தல் ஒழுங்கில் புதிய நகர சபை உறுப்பினர் அடுத்த மாதமளவில் தனது அங்கத்துவத்தை பெறவுள்ளதாகவும் பழைய அங்கத்தவர் எம்.எச்.ஏ.நஸீர் அஹமட் மீள் அழைக்கப்பட்டு நகர சபையின் புதிய உறுப்பினராக ஆசிரியர் எஸ்.எச். பிர்தௌஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த எட்டு வருடங்களாக இயக்கத்தின் முஸ்லிம் அரசியல் ஒழுங்கில் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவம் என்றது ஒரு தனிநபருடைய கையில் இருப்பது முஸ்லிம் அரசியல் சீரழிவுகளுக்கெல்லாம் காரணம் என்ற வகையிலும் அதில் மாற்று ஒழுங்கை கொண்டுவரும் நோக்கில் சூறா அடிப்படையிலான கூட்டு தலைமைத்துவத்தை ,ஒழுங்கை இந்த நாட்டுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி அதை கடந்த எட்டு வருடங்களாக வெற்றிகரமாக செய்து வருகின்ற ஒரு இயக்கம் என்ற வகையிலும் அதனுடைய சூறாவும் தங்களது அங்கத்தவர்களாலே தெரிவு செய்யப்பட்டு அவர்களும் உத்தியோகபூர்வமாக தங்களுடைய பணிகளை பொறுப்பேற்றுக் கொள்ளுகின்ற ,அறிமுகப்படுத்துகின்ற நிகழ்வும் அந்த மாநாட்டில் இடம்பெறவுள்ளதாகவும் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நளீமி மேலும் தெரிவித்தார்.
மாநாடு தொடர்பான மேலதிக தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கிய முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான் கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பல்வேறு பொதுக் கூட்டங்கள், மக்கள் சந்திப்புக்கள் ஆகியவற்றை நடாத்தி இருந்தாலும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி நடக்க இருகின்ற நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை தேசிய அரசியல் நிறுவனமாக தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்ளுகின்ற ஒரு கட்டமாக பார்க்கப்படவேண்டிய விடயமென்றும் அந்த ஒழுங்கில்தான் இந் மாநாடு இடம்பெறவுள்ளதாகவும் இதில் ஏறத்தாள ஆயிரம் கட்சியினுடைய உறுப்பினர்கள், அங்கத்தவரகள், பிரமுகர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொள்வார்கள் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எதிர்பாப்பதாகவும் குறிப்பாக இம்மகாநாடு தேசிய மாநாடு என்ற காரணத்தால் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் எந்த எந்த பிரதேசங்களில் எல்லாம் தனது வேளைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றதோ அந்த பிரதேசங்களில் இருந்து அங்கத்தவரகள், பிரமுகர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் வட – கிழக்கு தழுவியதாக ஆதரவாளர்கள பல பேர் கலந்து கொள்வார்கள் என அவர் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் இம் மாநாட்டைப் பொறுத்தவரையில் இம் மாநாட்டு இறுதியில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சில அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பான பிரகடனமும் வெளியிடுவதற்கான திட்டம் இருப்பதாகவும் மாநாடு என்கின்ற விடயம் உத்தியோகபூர்வமான செய்திகளை, நிலைப்பாடுகளை அறிவிக்கின்ற கூட்டம் என்கின்ற காரணத்தால் எங்களது இயக்கத்தின் அரசியல் நிலைப்பாடுகளை அறிவிக்க இருப்பதாகவும் அத்தோடு அண்மைக் காலமாக வட மாகாண சபை தேர்தலுக்குப் பிரகு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஓரு தேசிய அரசியல் வேலைத்திட்டம் வருகின்ற நேரத்தில் ஒரு கூட்டணியாக வேலை செய்கின்ற ஒழுங்கை பின்பற்றுவதாகவும் நீதிக்கும் சமாதானத்துக்குமான முன்னணி, ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான மையம் இந்த அமைப்புக்களுடன் சேர்ந்து பொதுக் கூட்டணியாக வேலை செய்வதாகவும் இந்த அரசியல் கூட்டணிகளின் பிரமுகர்களும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாகவும் ,ஏனைய கட்சிகளை பிரதிநிதித்துப்படுத்துவதாக இல்லாவிட்டாலும் ஏனைய கட்சிகளை சேர்ந்த சில முக்கியமான பிரமுகர்களையும் அழைத்து அவர்களை கலந்து கொள்ள செய்வதற்கான உத்தேசமும் இருப்பதாகவும் தெரிவித்ததோடு புதிய சூறா பிரகடனம் என்கின்ற விடயத்தில் ஏனைய கட்சிகளின் மகாநாடு போன்று தலைவர்களை ,தவிசாளர்களை தெரிவு செய்கின்ற விடயம் இடம்பெறும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை பொறுத்தவரையில் தலைமைத்துவ கட்டமைப்பு என்கிறது சூறா என்கின்ற அடிப்படையில் ஒரு பதிய சூறாவை அன்றைய தினம் பிரகடனம் செய்கின்ற நிகழ்வு இம் மகாநாட்டில் முக்கிய அங்கமாக இடம்பெறும் எனவும் அந்த புதிய சூறாவுக்கான புர்வாங்க ஏற்பாடுகள் நடைபெறவதாகவும் அதில் புதிய பழைய முகங்களாக புதிய சூறா அமையுமெனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் மேலும் தெரிவித்தார்.
இவ் ஊடக மாநாட்டில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷேய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறப்பினர்களான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான், அஷ்ஷேய்க் சபீல் நளீமி, ஆசிரியர் பிர்தௌஸ் ,முன்னாள் காத்தான்குடி பிரதேச சபை தவிசாளர் காஸிம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Published by
![rahuman[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/04/rahuman1.jpg?w=150&h=122)

Leave a comment