கிண்ணியா: பெருகிவரும் டெங்கு நோய்கள் காரணமாக அதிகமானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அத்தோடு தற்போதைய ஆய்வுகளின் படி டெங்கு நோயினால் கிண்ணியாவில் 16 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது. அத்தேடு டெங்கு நோய் பரவும் வீதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச செயலகம், கிண்ணியா சுகதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், கிண்ணியாவில் காணப்படும் விளையாட்டுக் கழகங்கள், சங்கங்கள் போன்றன ஒன்றிணைந்ததான சிரமதானங்கள் அதிகமாக கிண்ணியா பிரதேசத்தில் அதிகமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கமும் டெங்கு நோய் பரவும் வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துவருவதும் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது.
கிண்ணியாவில் டெங்கு நோய் பரவும் நிலையை கருத்திற் கொண்டு கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபின் பணிப்பின் பேரில் இமாம் கொமைய்னி விளையாட்டுக் கழக உறுப்பினர்களும், மாலிந்துறை கிராம அபிவிருத்தி சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த சிரமதான நிகழ்வு இன்று பெரிய பள்ளி வீதியிலிருந்து றேன்ஜர்ஸ் மைதானம் வரையான வடிகான்கள் துப்புறவு செய்யப்பட்டுள்ளது.
இச்சிரமதானத்தின் போது கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், பிரதேச செயலாளர் சி.கிரிஸ்நேந்திரன், எம்.ஓ.எச். எம்.எச்.எம்.றிஸ்;வி, ஆர்.டி.ஓ. நாஸர், ஆர்.டி.எஸ். தலைவர் எம்.ஐ. நிஜாம்தீன், இமாம் கொமைய்னி விளையாட்டுக்கழக தலைவர் பி.எம். றைஸ், அத்துடன் பொலிஸாரும் இதில் இணைந்து கொண்டதோடு நகரசபை சுகாதார தொழிலாளிகனால் கூழங்கள் ஏற்றி அப்புறப்படுத்தப்படுவதையும் காணலாம்.
Published by

Leave a comment