டாக்கா: 12வது ஆசியக் கிண்ணப்போட்டிகள் நாளை 25-02-2014 செவ்வாய்க்கிழமை பங்களாதேஷில் கோலாகலமாக இடம்பெற இருக்கின்றன. பங்களாதேஷின் பதுல்லாஹ் மைதானத்தில் முதல் ஐந்து போட்டிகளும், மேர்பூர் மைதானத்தில் மீதி ஐந்து போட்டிகளும் இடம்பெறுகின்றன.
போட்டிகள் அனைத்தும் இரவு பகல் ஆட்டமாக இடம்பெறுகின்றன. உள்ளுர் நேரப்படி பி.பகல் 2 மணிக்கு, இலங்கை நேரப்படி பி.பகல் 13:30 மணிக்கு ஆரம்பமாகிறது.
இதுவரை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நான்கு அணிகளே இவ் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வந்தன. ஆனால் இம்முறை அறிமுக அணியாக ஆப்கானிஸ்தான் ஆசியக் கிண்ணத்துக்குள் முதன் முதலாக காலடி எடுத்து வைக்கின்றது.
ஒவ்வொரு அணியும் ஏனைய அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாட வேண்டும். இதற்கேற்ப ஒரு அணிக்கு 4 போட்டிகள் வழங்கப்படுகின்றன.
முதல் லீக் சுற்றில் வெற்றிபெரும், வெற்றி புள்ளிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தெரிவு செய்யப்படும்.
இறுதிப் போட்டி எதிர்வரும் மார்ச் 8ம் திகதி மேர்பூர் மைதானத்தில் பகல் இரவு போட்டியாக இடம்பெறும்.
இத்தொடரில் இலங்கை இரசிகர்களை உற்சாகப் படுத்திச் செல்லும் இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி, முதல் போட்டியாக இடம் பெறுவதும், உலக இரசிகர்களை உற்சாகப்படுத்தும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இடம் பெற இருப்பதும் ஆசியக் கிண்ணப் போட்டியின் துரும்புப் போட்டிகளாக அமைய இருக்கின்றமை மற்றுமொரு விசேட அம்சமாகும்.
இரசிகர்களை அசத்திச் செல்லும் இவ் ஆசியக் கிண்ணப்போட்டியில் ஆசியாவின் 2014 சம்பியனாக தெரிவாகும் அணி எது என்பதைக் காண இரசிகர்கள் அவாக் கொண்டிருக்கின்றமை சிறப்பம்சம்.
Published by


Leave a comment