ஏறாவூர்: உங்கள் தாய் மண்ணில் வாழ்வதற்காக எங்களால் முடிந்த அத்தனை உதவிகளையும் கடந்த காலங்களைப்போல் வழங்குவதற்கு ஆயத்தமாக இருக்கிறோம் என சமூக சேவையாளரும், இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்கத்தின் ஆலோசகருமான இல்மி அஹமட் லெவ்வை தெரிவித்தார்.
இருநூறுவில் கிராமத்திலிருந்து 1985ம் ஆண்டு ஏற்பட்ட வன்செயல் காரணமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் காத்தான்குடி ,மஞ்சந்தொடுவாய், ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர் அனைவரையும் மீள் குடியேற்றுவதற்கான நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஏறாவூரில் இடம்பெயர்ந்தவர்களை தெளிவூட்டல் செய்வதற்கான கலந்துரையாடல் கடந்த 21 வெள்ளிக்கிழமை மாலை ஏறாவூரில் இருநூறுவில் நலன்புரிச்சங்க ஏற்பாட்டில் இல்மி அஹமட் லெவ்வை தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த காலங்களைப்போல் அல்லாது முதன்முறையாக மின்சாரம் கிடைத்துள்ளது இந்திய வீட்டுத்திட்டம் போன்ற அடிப்படையான வசதிகளும் அரசாங்கத்தால் எற்படுத்தப்படுவதற்கான ஆரம்ப கட்டவேலைகள் இடம்பெற்றாலும் இன்னும் பல விடயங்களை நாங்கள் அடையாளங் கண்டிருக்கின்றோம் இவைகளையும் உரிய உயர் அதிகாரிகள் ,மற்றும் நலன் விரும்பிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று செய்து தருவோம்.
ஆனால் உங்களது சம்மதம் எவ்வாறு இருக்கும் என கேட்கப்பட்டபோது எங்களில் மரணித்தவர்கள் போக எஞ்சியவர்கள் அனைவரும் மீள்குடியேறத்தயார் என அம்மக்கள் உறுதியாக தங்களது முழுவிருப்பத்தை மகிழ்சியோடு தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் உன்னிச்சை இருநூறுவில் முஸ்லிம் நலன்புரிச்சங்கத் தலைவர் எம்.எஸ் அப்துல் கபூர், இருநூறுவில் மு.ஜூ. பள்ளிவாயல் செயலாளர் எம்.எஸ். ஆதம் லெவ்வை, பொருளாளர் கே.எம்.நாஸர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Published by

Leave a comment