மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

unnamedஇர்ஷாத் றஹ்மத்துல்லா 

புத்தளம்: நாட்டில் உள்ள பாடசாலைகளுள் ஆயிரம் இடை நிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் சாஹிராவில் தேசிய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடம்’ இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் ஜானதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது. இதேவேளை புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் புத்தளம் ஜானதிபதி விஞ்ஞான கல்லூரி ஆகியவற்றில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ‘மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடங்களும்’ ஜானதிபதி அவர்களினால் திறந்து வைக்கும் அடையாளமாய் அக்கல்லூரிகளின் அதிபர்களான திருமதி சுமையா றிஸ்வான், எஸ். எல். சிராஜூதீன் ஆகியோர்களுக்கு குறித்த ஆய்வு கூடத்திற்குரிய திறப்புக்களும் இவ்வைபவத்தின் போது ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டன. பின்னர் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் அதிபர் ஏ. சி. எம். யாகூபினால் நினைவுச் சின்னம் ஒன்று ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இம்மூன்று கல்லூரிகளும் சாஹிராவின் பழைய மாணவரும் புத்தளம் நகரபிதாவுமான கே.ஏ.பாயிஸின் முயற்சியினால் ஆயிரம் இடை நிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளதுடன்இ இக்கல்லூரிகளில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன.

மஹிந்தோதய தொழில் நுட்ப விஞ்ஞான கூடம் 40 கணிணிகளைக் கொண்ட ஒரு ‘கணணி அறையாகவும்’ இ, 20 கணணிகளைக் கொண்ட ஒரு ‘மொழி அறையாகவும்’,  கணித அறிவை மேம்படுத்த 30 வகையான உபகரணங்களைக் கொண்ட ஒரு ‘கணித அறையாகவும்’,  ‘நெனசல’ என அழைக்கப்படும் ‘ஓலி ஒளி வடிவிலான கற்கை அறையாகவும்’ அமைந்துள்ளது.

அத்துடன் வண்ணாத்திவில்லு, நவகத்தேகம, ஆராச்சிக்கட்டு போன்ற பிரதேச பாடசாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள இவ்வாறான ஆய்வு கூடங்களும் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை மஹிந்த சிந்தனை விரைவான வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்பட்ட 26 கிலோ மீற்றர் தூரத்தையுடைய பாலாவி கல்பிட்டி பிரதான வீதியும் நேற்றைய தினம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. இது தொடர்பான வைபவம் இன்று பகல் 2 மணியளவில் நுரைச்சோலை பொருளாதார வர்த்தக மையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் பந்தல குணவர்தன, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன, தொழில்நுட்ப மற்றும் தொலைத் தொடர்புகள் அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டிய, பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா, வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேகர, வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர். பலள்ள, பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர், வடமேல் மாகாண அமைச்சர்களான சனத் நிசாந்த, சந்தியா ராஜபக்ஷ, புத்தளம் நகர சபைத் தலைவர் கே. ஏ. பாயிஸ், புத்தளம் மாவட்டச் செயலாளர் எம். கிங்ஸ்லி பெர்னாண்டோ, புத்தளம் பிரதேச செயலாளர் எம். ஆர். எம். மலிக் உட்பட பலரும் கலந்து கொண்டனர். 

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment