‘சமூக உணர்வும், மக்களுக்கு பணியாற்றக் கூடிய எண்ணமும் கொண்ட பல்லிணத்தை சேர்ந்த வேட்பாளர்கள் எமது பட்டியலில் போட்டியிடுகின்றனர்’-அமைச்சர் றிசாத்

rishad– இர்ஷாத் றஹ்மத்துல்லா 

கொழும்பு: கொழும்பு மாவட்ட சிறுபான்மை சமூகத்தின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவே எமது கட்சி போட்டியிடுகின்றது. எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளராக பாயிஸ் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் சமூக உணர்வும், மக்களுக்கு பணியாற்றக் கூடிய எண்ணமும் கொண்ட பல்லிணத்தை சேர்ந்த வேட்பாளர்கள் எமது பட்டியலில் போட்டியிடுகின்றனர் என்று கூறினார்.

நேற்று(2014.02.22) கொழும்பு மட்டக்குளியவில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பேசுகையில் –

எமது கட்சியின் உருவாக்கம் இந்த நாட்டில் வாழும் பாதிக்கப்பட்ட, நீதி மறுக்கப்பட்ட சமூகத்திற்காக குரல் கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டதாகும். அதனை நாம் கடந்த காலங்களில் வடக்கிலும், கிழக்கிலும் அதற்கு வெளியிலும் செய்துவருகின்றோம்.

அதே போல் தமிழ் பேசும் மக்கள் செறிவாக வாழும்மேல் மாகாணத்திலும் அதனை முன்டுப்பதுடன்இஅவர்களது தேவைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதற்காக களம் இறங்கியிருக்கின்றோம்.

நடந்து முடிந்த வடமாகாண சபையில் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனங்களை பெற்றது.அதில் ஒரு ஆசனத்திற்கு சிங்கள சகோதரர் தெரிவானார்.ஏன் இதனை இங்கு சொல்கின்றேன் என்றால், எம்மில் இனவாதம் இல்லைஇவடக்கில் வாழும் சிங்கள மக்களும் அவர்களது உரிமைகளை பெறவேண்டும் என்பதற்காக எமது கட்சி அவ்வாறு செயற்பட்டது.

எமது கட்சியின் சின்னம் மயிலாகும்.இது புதிய கட்சி என்பதால் பலருக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம்.அதனை அறிமுகப்படுத்துவது இங்குள்ளவர்களின் பணியாகும்.இந்த தேர்தலில் எமது கட்சி வெற்றிபெரும் போது அதில் தெரிவாகின்ற உறுப்பினர்கள் வெறும் தனிநபர்களாக இருக்கப் போவதில்லை.அவர்கள் அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களின் பலத்தினைக் கொண்டவர்களாக செயற்படுவார்கள் என்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இங்கு கூறினார்

Published by

Leave a comment