காத்தான்குடி: கல்வியில் எமது சமூகம் இன்னும் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும் அதேவேளை ஒழுக்க விழுமியங்களிலும் எமது மாணவர்கள் சரிவர பின்பற்றியாக வேண்டும் இவ்வாறு நேற்று காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பெற்றோர் அபிவிருத்திச்சங்க (SDC) பொதுச்சபைக்கூட்டத்தின்போது கணிதப்பாட சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் MNM. பரீட் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
தனது பிள்ளை ஒவ்வொருவருக்கும் நல்ல பிள்ளைதான் ஆனால் ஏனையோருக்கு கெட்ட பிள்ளையாக தென்படலாம் இந்த வகையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும்.
சுமார் 7 மணித்தியாலங்கள் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புகின்றீர்கள் அந்தப்பிள்ளை சிறு தவறு செய்து விட்டால் ஆசிரியர்களாகிய நாங்கள் தண்டிக்க வேண்டியேற்படுகிறது. எந்த ஆசிரியரும் தான் இந்த பிள்ளைக்கு இன்று அடிக்க வேண்டும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று வருவதில்லை அவ்வாறு தண்டணை வழங்கும்போது அதை பெரிதாக எடுத்துக்கொண்டு பொலிசுக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் சென்று முறையிடுகின்றனர்.
அதனால் ஆசிரியர்களாகிய நாங்கள் சிரமங்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாக வேண்டியேற்படுகிறது. இதனால் ஏனைய பிள்ளைகளும் பாதிக்கப்படுகின்றனர் இந்த நிலை மாற வேண்டும் எனத்தெரிவித்தார்.
மேற்படி பொதுச்சபைக்கூட்டத்தின்போது 2 வருடத்திற்கான நிருவாக சபை தெரிவுசெய்யப்பட்டது. தலைவராக அதிபர் திரு மாஹிறா (ஆசிரியை) செயலளர் எம்.ஐ ரசீட் பொருளாளர் அப்துர்ரஹ்மான் (ஆசிரியர்) உப தலைவர் அமீன்(ஆசிரியர்) உறுப்பினர்களாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், ஏ.எல்.எம்.அரஷ்ப், ஏ.எம்.சாஹிர், திருமதி றிபாயா இஸ்மாயில் பழைய மாணவர் சங்கம் சார்பாக எம்.ஐ உசனார், எம்.மிப்ஸி மற்றும் ஆசிரியர்கள் சார்பாக எம்.எச்.எம்.அலியார், திருமதி. முஸ்தபாவும் தெரிவு செய்யப்பட்டனர்.
Published by




Leave a comment