கிண்ணியா: கிண்ணியா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகளுக்காக செல்வோர்களில் 60 வீதத்திற்கும் அதிகமாநோர் தொற்றுநோய்களால் பீடிக்கப்பட்டவர்களென ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு தற்போதைய ஆய்வுகளின் படி டெங்கு நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கமும் டெங்கு நோய் பரவும் வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதோடு 25 ஆயிரம் ரூபா வரையிலான அபராதமும் விதிப்பதாக தெரிவித்துள்ளது. டெங்கு நோய் பரவும் நிலையை கருத்திற் கொண்டு கிண்ணியா பிரதேசத்தை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன் சிரமதான பணியினை ஹிஜ்ரா வீதிகள், அப்பிரதேச கான்கள் சிரமதானத்தின் மூலம் துப்புறவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஏற்பாட்டினை எம்.ஓ.ஒச்.ஒபீஸ், கிண்ணியா நகரசபை, பிரதேச சபை, தளவைத்தியசாலை, பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்பு படை மற்றும் பொதுமக்களும் சேர்ந்து ஒழுங்கு செய்து சிரமதானத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன்போது கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், எம்.ஓ.எச். டொக்டர் றிஸ்வி சிரமதானத்தில் கான்கள் துப்புறவு செய்வதில் ஈடுபடுவதையும் சுத்தம் செய்யப்பட்ட குப்பை கூழங்கள் நகரசபை சுகாதார தொழிலாளிகனால் ஏற்றி அப்புறப்படுத்தப்படுவதையும் படங்களில் காணலாம்.
Published by

Leave a comment