பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் அஹ்மத் அஷ்ரப் எழுதிய முரண்பாடான ஹதீஸ் அடிப்படை விளக்கமும் இலகுபடுத்தலும் எனும் நூல் வெளியீடு

ashroff (2) பழுலுல்லாஹ் பர்ஹான்

நஜ்ரான்: சவூதி அரேபியா நஜ்ரான் பல்கலைகழகத்தில் ஹதீஸ் துறை இணைப் பேராசிரியர் கலாநிதி அஷ்ஷெய்க் UL. அஹ்மத் அஷ்ரப் Ph.D அல்ஹதீதுஸ் ஸாத் தஃஸீலுன் வ தஸ்ஹீல் (الحديث الشاذ تأصيل وتسهيل) முரண்பாடான ஹதீஸ் அடிப்படை விளக்கமும் இலகுபடுத்தலும் எனும் நூலை எழுதியுள்ளார்.

இந்நூல் 2009 ஆண்டு எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைகழகத்தின் உஸூலுத்தீன் பீடத்தின் அகடமிக் சஞ்சிகை இதழ் 28ல் பிரசுரிக்கப்பட்டு பின்னர் இதனை எகிப்து நாட்டின் கெய்ரோவிலுள்ள தாறுல் முஹத்திதீன் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நூலில் அஷ்ஷெய்க் UL அஹ்மத் அஷ்ரப் Ph.D ழயீபான ஹதீஸ்களில் ஒரு வகையாகிய ஹதீத் ஸாத்தை (முரண்பாடான ஹதீஸ் விளங்கிக்கொள்ளக்கூடிய நுட்பங்களை நவீன முறையில் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.

மேலும் இந்நூல் அஷ்ஷெய்க் அல்குமாரி (الشيخ الغُماري) அவர்களின் அல்பவாயிதுல் மக்ஸூதா பில் அஹாதீதுஸ் ஸாத்தா அல மர்தூதாالفوائد المقصودة في الأحاديث الشادة المردودة என்ற நூலுக்கு விமர்சனமாகவும் அமைந்துள்ளது. இந்நூல் ஹதீஸ் கலையை கற்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில் நவீன முறையில் எழிய நடையில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.nooonbooks.com  என்ற இணைய தளத்தில் இந்நூல் பற்றிய ஏனைய தகவல்களை பெறமுடியும்.

ashroff (2)
கலாநிதி அஷ்ஷெய்க் UL. அஹ்மத் அஷ்ரப் Phd

ashroff

Published by

Leave a comment