ஆரையம்பதி: ஆரையம்பதில் அமைந்துள்ள உயர் கணக்கீட்டு நிறுவகம் (Advance Technical Institute) நிறுவனத்தினால் புதிதாக இவ்வாண்டு நுழைந்த மாணவர்களுக்கான தொழில் உலகில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வது தொடர்பாகவும் நடத்தை மாற்றம் தொடர்பாக விசேடமாகவும் குறிப்பிட்டு வழி காட்டல் கருத்தரங்கு ஒன்று நேற்று (20.02.2014) உயர் கணக்கீட்டு நிறுவகத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் (பீ.எஸ்.சி,எஸ்.எல்.ஏ.எஸ்) அவர்கள் வளதாரராக கலந்து கொண்டு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந் நிகழ்வினை காத்தான்குடி பிரதேச செயலக தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவு,திறன் அபிவிருத்தி பிரிவு என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Published by



Leave a comment