காத்தான்குடி: காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அன்பளிப்புப் பொதிகளை இலவசமாக வழங்கும் வைபவம் இன்று 2014.02.21 ம் திகதி காத்தான்குடி தள வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இவ் அன்பளிப்புப் பொதிகளை லயன்ஸ் கிளப் காத்தான்குடி ஸ்மார்ட் கிளப் இனால் அதன் பணிப்பாளர் டாக்டர் UL. நஸீர்தீன் அவர்களினால் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் MSM. ஜாபிர் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் வைபவத்தில் Dr. DM. மாஹிர் அவர்கள் உட்பட ஏனைய கழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி தள வைத்தியசாலையில் பிறக்கும் குழந்தைகளுக்காக இலவசமாக இப் பொதிகள் வழங்கப்பட்டதுடன் ஏற்கனவே தாய்ப்பாலூட்டல் நிலையம் ஒன்றும் லயன்ஸ் கிளப் காத்தான்குடி ஸ்மார்ட் கிளப்பினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Leave a comment