கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சி

IMG_6242– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஓட்டமாவடி: கல்குடா மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான உளவளத்துணை நிகழ்ச்சி மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று முன்தினம் கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய அதிபர் ஏ.எல் நெய்னா முகம்மட்,கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மத் (காஸிமி) உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இங்கு விஷேட வளவாளராக கிழக்கிழங்கையின் பிரபல உளவளத்துணை ஆலோசகர் அஷ்ஷெய்க் எஸ்.எம். அப்துல்ஹமித் (ஷரயீ) கலந்து கொண்டு மாணவர்கள் தமது கற்றல் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது தொடர்பாகவும்,தமது ஆளுமைகளை இனம் கண்;டு அதனை எவ்வாறு விருத்தி செய்வது தொடர்பான விளக்கங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

04

IMG_6242IMG_6244

Published by

Leave a comment