டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோணி இரண்டாவது நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்தால் வரப்போகும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பங்கேற்க போவதில்லை என தெரிய வருகிறது.
இரண்டாவது டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்ற போது டோணிக்கு உடலின் இடது பக்கத்தில் அடிப்பட்டது.இதனால் அவரால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு பதில் விராத் கோஹ்லி ஆசிய தொடருக்கு இந்திய அணியின் தலைவராக செயல்படுவார் என தெரிகிறது. டோணி வரும் நான்காவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாடப் போவதில்லை.அவரது உடல்நிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ செயலாளர் சஞ்சய் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டோணிக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் அவரது இடத்தில் விளையாடுவார் என்றும், கோஹ்லி தலைவர் பொறுப்பில் அணியை வழிநடத்துவார் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Published by
![India-Cricket_Kand-(3).jpg.crop_display[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/08/india-cricket_kand-3-crop_display1.jpg?w=150&h=110)
Leave a comment