காத்தான்குடி: அண்மைக் காலங்களாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலமாக இரண்டு சமூகங்களுக்கிடையில் பிரச்சினையை உண்டாக்குவதன் மூலம் ஒரு வங்குரொத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர்.
அரசாங்கம் எல்லா வகையான வளங்களையும் அதாவது வீதி அபிவிருத்தி, பாடசாலை அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்;று எல்லா துறைகளையும் பொதுவாகவே தமிழ் மக்களுக்காக செய்கின்ற இந்த வேளையில் தாங்கள் அரசியலில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதானால் இனவாதத்தினூடாகவும், பிரிவினையினூடாகவும் மாத்திரமே அரசியலில் நிலைத்திருக்க முடியும் அல்லது போனால் தமிழ் மக்கள் அரசாங்கத்துடன் இணைந்து எங்களை ஓரங்கட்டி விடுவார்கள். என்ற அச்சத்தினால் அவ்வப்போது இனமுறுகளை ஏற்படுத்தக் கூடிய கருத்துக்களை மக்கள் முன் தெரிவித்து அரசியல் செய்ய முற்படுவதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
மட்டக்களப்பு என்றால் அது தமிழர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்கின்ற புலிகளின் அதே கோட்பாட்டினை இப்பொழுது புலிகள் ஆதரவுடன் இயங்கி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் செய்ய முற்படுவதனை எங்களால் விளங்கிக் கொள்ள முடிகின்றது. அறிக்கை விடுவதற்கு முன்பு அதன் ஆழம் புரியாமல் வெளியாக்கிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா ஐயா அவர்கள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அயராத முயற்சியினால் இம்மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியின் எதிர்கால செயற்பாட்டினை நன்கு அறிந்து கொள்ளாமலேயே அண்மையில் மட்டக்களப்பு என்ற வாசகம் தற்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்ற மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி என்று பெயர் வைக்கப்படக் கூடாது என்றும் அது அரபு மொழி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்டதென்றும் அதாவது முஸ்லிம்களுக்காகவே உருவாக்கப்பட்டதென்றும் அதற்கு மட்டக்களப்பு என்ற பதத்தினை அந்த பல்கலைக்கழக கல்லூரிக்கு சேர்க்கக் கூடாதென்றும் தெரிவித்திருந்தார்கள்.
இது ஓர் பொதுவான அரச தனியார் பல்கலைக்கழக கல்லூரி என்பதைனயும் இதற்கு அனுமதிக்கப்படுகின்ற மாணவர்கள் வசதி குறைந்தவர்களாக இருக்கின்ற வேளையில் அவர்களுக்கான கட்டணங்களை மாணிய அடிப்படையில் வழுங்குவதென்றும் இக் கல்லூரிக்கு நிதி உதவி வழங்கும் இலங்கை ஹிரா பவுண்டேசன் தீர்மானம் எடுத்திருக்கும் இதே வேளையில் இங்கு வழங்கப்படும் தராதரப்பத்திரம் மிகச் சிரிய கட்டணங்களைச் செலுத்தி எல்லா மாணவர்களுக்கும் உயர்கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை விளங்கிக் கொள்ளாத கொளரவ பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிரான இன ரீதியான கருத்துக்களை வெளியிடுதல் என்பது அனுமதிக்க முடியாததாகும்.
அண்மைக்காலங்களாக முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயபூர்வமான உரிமைகளை கொடுக்காமல் தடுப்பதும் அதற்கு ஆதரவாக குரல் கொடுப்பதுமான ஓர் நடவடிக்கையை தமிழர் விடுதலை கூட்டமைப்பினால் முடக்கிவிடப்பட்டிருக்கின்றது.
உதாரணமாக மண்முனைப்பற்று பிரதேசத்திலுள்ள காணியிலிருந்த முஸ்லிம்களை வெளியேற்றுகின்ற ஒரு பாரிய முயற்சி அதேபோன்று காத்தான்குடி எல்லை சம்பந்தமான வர்த்தமானி அறிவிப்பு பிழை என்று வாதிடுவது, தொன்றுதொட்டு பெரிய தோனா என்று வரையறுக்கப்பட்ட நில அடையாளங்கள் பிழை என்று மறுப்பதன் மூலமாக காத்தான்குடி எல்லையை சுறுக்குவது இது போன்ற செயல்கள் மட்டுமல்லாமல் அரச உயர் அதிகாரிகள் முஸ்லிம்களிலிருந்து நியமிக்கப்படுவார்களாக இருந்தால் அதற்கு எதிராக கண்டன அறிக்கை விடுவது இவ்வாறான செயல்களை பார்க்கின்ற பொழுது புலிகள் விட்ட இடத்திலிருந்து முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குகின்ற அந்தப் பணியினை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையேற்றுள்ளதாகவே எங்களால் பார்க்க முடிகின்றது.
இந்த நிலமை தொடர்ந்து செல்லுமாக இருந்தால் கிழக்கு வாழ் முஸ்லிம்கள் ஒன்றினைந்து தங்களுக்கான எல்லா வளப்பங்கீடுகளையும் எல்லா நிர்வாகத்தினரையும் பிரித்தெடுத்து தமிழர்களின் தலையீடு இல்லாமல் இன்னுமோர் சமூகமாக பிரிந்து வாழ்வதற்காக வீதியில் இறங்கி உரிமைக்காகவும் நியாயங்களுக்காகவும் சாத்மீக ரீதியில் போராட வேண்டி ஏற்படும் அதற்குண்டான முழுப் பொறுப்பினையும் ஏகபோக தமிழ் மக்களின் பிரதிநிதி என்று மார்பு கட்டிக் கொள்ளும் தமிழர் விடுதலை கூட்டமைப்பு பொறுப்பேர்க்க வேண்டி வரும் ஈழ போராட்டத்தில் இணைந்திருந்த முஸ்லிம் போராளிகளை வாகரையில் தமிழ் விடுதலைப்புலிகள் கொன்று ஈழம் என்பது தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற அந்த கோட்பாட்டினை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீப காலமாக தமிழர் விடுதலைக் கூட்டனியினர் நடந்து கொள்கின்றனர் இது முஸ்லிம் சமூகத்தில் அதிருப்தியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by

Leave a comment