தாய்லாந்து ஏ.ஐ.ரி கருத்தரங்கு நிறைவுபெற்று நகரபிதா ஹில்மி மஹ்ரூப் வருகை

T.Toor 3– ரைஸ்

கிண்ணியா: தாய்லாந்தின் பேங்கொக் நகரில் நடைபெற்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் சம்பந்தமான ஒருவாரகால விசேட கருத்தரங்கில் கலந்து கொண்ட கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தாய்லாந்திலிருந்து நேற்று நாடுதிரும்பினார்.

தாய்லாந்தின் ஏ.ஐ.ரி இன் அழைப்பின் பேரில் இலங்கை பாகாப்பு அமைச்சின் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோரம் பேணல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கின் போது கடற்கரையோரம் எவ்வாறு பாதுகாப்பது, கடற்கரையோரங்கள் எவ்வாறு அபிவிருத்தி செய்வது, இயற்கையான பாதுகாப்பை எவ்வாறு பேணுவது போன்ற விடயங்கள் சம்பந்தமான செயன்முறை பயிற்சி மற்றும் விளக்கங்களை தாய்லாந்து பேராசிரியர் டொக்டர் ஜொனதன் ஜோ மற்றும் கலாநிதி டொக்டர் சாகிர் ஹூசைன் போன்றோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கருத்தரங்கில் கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப், கடற்கரையோர பாதுகாப்பு நகர அபிவிருத்தி பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க, சீ.சீ.டி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தன மற்றும் தாய்லாந்துக்கான விஜயத்தினை மேற்கொண்ட குழுவினர் ஒருவாரகால விசேட கருத்தரங்கினை நிறைவ செய்து நேற்று நாடு திரும்பியிருந்தனர்.

T.Toor 1

T.Toor 3

 T.Toor 5

Published by

Leave a comment